பாடசாலை சென்ற 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது


avatar

வெலிகந்த - சிங்கபுர வீதி மிருக வைத்திய நிலையத்திற்கு முன்பாக இன்று (09) காலை 6.45 அளவில் 15 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி துவிச்சக்கரவண்டியில் மனம்பிட்டி சிங்க மகா வித்தியாலயத்திற்குச் சென்று கொண்டிருந்த போது சிறுமியை நபரொருவர் கடத்த முற்பட்டு அது பலனளிக்காத நிலையில் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவு புரிந்துள்ளார்.

குறித்த பகுதியில் பயணித்த பஸ் ஒன்றின் பயணிகள் அசம்பாவிதத்தை கண்ணுற்று சந்தேகநபரை பிடித்து வெலிகந்த இராணுவ முகாமில் ஒப்படைத்து பின் வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

இராணுவ முகாமில் இருந்து தப்பி வெலிகந்த விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஓடிக்கொண்டிருந்த வேளை பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வெலிகந்த இராணுவ முகாமில் கடமையாற்றும் படைச் சிப்பாய் என பின் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!