இந்தியாவில் தாயை இழந்த ஆட்டுக் குட்டிகளுக்கு பாலூட்டும் பசு!


avatar

இந்தியாவில் தாயை இழந்த ஆட்டுக் குட்டிகளுக்கு பாலூட்டும் பசு! Pasupa10
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது கரும்பாலம். இங்கு வசிப்பவர் விஸ்வம்பரன். டீக்கடை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவர் வளர்த்து வந்த ஒரு ஆடு 2 குட்டிகளை ஈன்று விட்டு இறந்தது. அதனால் இரு குட்டிகளுக்கும் புட்டிபால் கொடுத்து விஸ்வம்பரன் பராமரித்து வந்தார்.

இந்நிலையில் ஆட்டுக்குட்டிகள் இரண்டும் விஸ்வம்பரன் வளர்க்கும் பசு மாட்டுடன் நெருங்கி பழகின.

அதன் மடியில் வாயை வைத்து பாலை உறிஞ்சின. தாயுள்ளம் கொண்ட அந்த பசுவும் ஆட்டுக்குட்டிகளை புறக்கணிக்காமல் அரவணைத்துக் கொண்டது.

காலையில் ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுத்து விட்டு மேய்ச்சலுக்கு செல்லும் பசு மாலையில் வீடு திரும்பியதும் மீண்டும் ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கிறது. இந்த காட்சியை தினமும் ஏராளமான மக்கள்பார்த்து அதிசயிக்கின்றனர்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!