டொரண்டோவில் பூட்டிய காரில் அழுது கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை மீட்பு.


avatar

டொரண்டோ நகரத்தில் குயின்ஸ் குவே என்ற பகுதியில் பூட்டிய கார் ஒன்றில் இரண்டு வயது குழந்தை இரண்டு பெண்களின் சமயோசித யோசனையால் எவ்வித ஆபத்தும் இன்றி மீட்கப்பட்டது.

டொரண்டொ பகுதியில் குயின்ஸ் குவே என்ற பகுதியில் கார் ஒன்று தன்னந்தனியே நின்று கொண்டிருந்தது. அந்த காரின் உள்ளே ஒரு இரண்டு வயது குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்த அவ்வழியே சென்ற இரு பெண்கள், உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் காரின் கண்ணாடியை உடைத்து, காரில் அழுது கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். குழந்தை 20 டிகிரிக்கும் குறைந்த வெப்பநிலையில் அதிக நேரம் இருந்ததால் மயக்கநிலைக்கு போனது. எனவெ உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

குழந்தையின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் மீது வழக்கு போடலாமா என்பது குறித்து காவல்துறையினர் ஆலோசனையில் ஈடுபடுவதாக தெரிகிறது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!