உலகில் முதல் தடவையாக கஞ்சா விற்பதற்கு அனுமதி!


avatar

உலகில் எந்த நாட்டிலும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்க சட்டப்பூர்வ அனுமதி வழங்க வில்லை. ஆனால் தென்அமெரிக்க நாடான உருகுவேயில் கஞ்சா விற்க சட்டப்பூர்வ அனுமதி வழங்க முடிவு செய்துள்ளனர்.

இந்த நாட்டில் கஞ்சா மற்றும் போதை பொருள் பழக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன.

மேலும் போதை மருந்து கும்பல்களின் அட்டகாசமும் அதிகமாக உள்ளது. அவர்கள் போதை மருந்துகள் மூலம் பல கோடி அளவிற்கு பணம் சம்பாதிக்கிறார்கள். இதை கட்டுப்படுத்த அரசே கஞ்சாவை சட்டப்பூர்வமாக விற்க அனுமதி அளிக்க உள்ளது.

வருகிற பாராளுமன்ற கூட்டத்தில் இதற்கான சட்டம் இயற்றப்படும் என்று அந்த நாட்டு மந்திரி எலுன்டோனியா பெர்னான்டோ கூறியுள்ளார். ஆனால் கஞ்சா பயன்படுத்துபவர்கள் இது சம்பந்தமாக அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு மட்டுமே கஞ்சா விற்கப்படும்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!