பாலியல் சாதனத்தை காளானென நம்பிய நிருபர் நெருக்கடியில்!!


avatar

பாலியல் சாதனமொன்றை மிக அரிதான காளானென நம்பி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்த நிருபர் ஒருவர் சங்கடத்தை எதிர்கொண்ட சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் தென் பிராந்தியமான லுய்சியன்பு கிராமத்தில் இப்பாலியல் சாதனத்தை கிராமவாசிகள் கண்டெடுத்துள்ளனர்.

நாங்கள் இதனை 80 அடி ஆலத்திலிருந்து தோண்டியெடுத்தோம். அதில் கண் மற்றும் மூக்கு இருப்பதை அவதானித்தோம். ஆனால் அது என்ன உருவம் என்பதை தீர்மானித்துக்கொள்ள முடியாமல் இருந்ததாக கிராமவாசி ஒருவர் தெரிவித்ததாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குழப்பமடைந்த கிராமவாசிகள் உள்ளூர் தொலைக்காட்சி நிருபரினூடாக இத்தகவலை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளனர்.

தொலைக்காட்சி நிருபரான யீ யன்பெங் அப்பொருள் தொடர்பான செய்தியை வழங்கியுள்ளார்.

இங்கு எம்மால் வாய் போன்று அமைப்புடைய பொருளொன்றை பார்க்கமுடியும். இப்பொருளை தொடுவதற்கு மிருதுவாக உள்ளது. இது ஓர் இறைச்சியை போல் உள்ளது என குறித்த பெண் நிருபர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்துள்ளார்.

இதேவேளை, இக் காளான் மிகவும் அரிதான காளானாகும். இதனை வளர்த்து எடுக்க வேண்டிய தேவை உள்ளது என அப்பெண் நிருபர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேற்படி நிகழ்ச்சியை பார்த்துகொண்டிருந்த பார்வையாளர்கள் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அது பாலியல் சாதனமென தெரிவித்துள்ளனர்.

சிலிக்கனுக்கும் சேதன பங்கசுக்கும் எவ்வாறு வேறுபாடு தெரியாமல் போனது என இவ்விடயம் தொடர்பில் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேற்படி செய்தி நிறுவனமானது இவ்விடயம் தொடர்பில் பார்வையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

எங்களது நிருபர் மிகவும் இளமையானவர் மற்றும் எச்சரிக்கையானவர். சங்கடமான மற்றம் தவறான செய்தி அறிக்கைக்காக நாங்கள் மன்னிப்புக்கோருகிறோம் என மேற்படி தொலைக்காட்சி நிறுவனமானது மன்னிப்புக்கோரியுள்ளது.

வீடியோவை யூடியுப்'ல பாத்துகோங்க.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!