இளம் சிறுமிகளை கடத்தி விபச்சார விடுதி நடத்திய 16 வயது சிறுமி கைது


avatar

கனடாவின் ஒட்டாவோ மாகாணத்தில் இளம் சிறுமிகளை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஒரு பெண்ணை அந்த ஊர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு 16 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமிகளை கடத்தி வந்து ஒரு வீட்டில் அடைத்து வந்து இந்தப் பெண் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இந்த பெண்ணுக்கு உதவியாக இருந்து வந்த 15 வயது மதிப்புடைய மேலும் இரு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் சிறுமிகளாக இருப்பதால் அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை பொலிஸார். பேஸ்புக், ருவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களின் மூலமாக வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு விபச்சாரத்தை நடத்தி வந்துள்ளார் அப்பெண்.

தனது மகளின் செயல் குறித்து அறிந்த அந்தப் 16 வயது பெண்ணின் தாயார் தனது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!