ஜெர்மனியில் ஒரே நாளில் 8135 முறை மின்னல்


avatar

ஜெர்மனியில் தொடர்ந்து புயல் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஜெர்மனியில் கடந்த வார இறுதியில் பெய்த புயல் மழையில் மரம் முறிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார்.

அதேபோல ஹெஸெனில் உள்ள கோல்ஃப் விளையாட்டு மைதானத்தில் மின்னல் தாக்கி மூன்று கோல்ஃப் வீராங்கனைகள் மரணமடைந்தனர்.

மற்றொரு பெண் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும், மின்னல் பலமாகத் தாக்கி 51 பேருக்குக் காயம் ஏற்பட்டது. ஒன்பது பேர் மோசமான காயங்களால் பாதிக்கப்பட்டனர். பவேரியாவில் நடந்த Volksfest விழாவில் புயல்காற்றால் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் 18 பேர் படுகாயமுற்றனர்.

கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டதாக ஸ்டட்கார்ட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. மரங்களும், மின்கம்பங்களும் பெயர்ந்து விழுந்ததால் மின்சாரவெட்டும், போக்குவரத்துத் தடையும் ஏற்பட்டன.

பெர்லின் பகுதியில் ஓர் இரவில் மட்டும் 8135 மின்னல் தாக்குதல் ஏற்பட்டதாக வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!