நெல்சன் மண்டேலாவின் மகள் தூதரானார்


avatar

தென் ஆப்ரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் மகள் ஜெனானி, அர்ஜென்டினா நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்க தலைவரான நெல்சன் மண்டேலாவின் மூத்த மகள் ஜெனானி(வயது 53).

மண்டேலா சிறையில் இருந்த போது 16 வயது பெண்ணான ஜெனானி தனது தந்தையை பார்க்க சென்ற போது, இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கடந்த 1973ம் ஆண்டு சுவாசி நாட்டு இளவரசரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஜெனானி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் படித்தார். கணவரை விவாகரத்து செய்த பின், தற்போது தென் ஆப்ரிக்காவில் தான் வசிக்கிறார்.

இதற்கிடையே இவர் அர்ஜென்டினா நாட்டு தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதை அர்ஜென்டினா அரசு வரவேற்றுள்ளது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!