சுட்டுக் கொல்லப்பட்டபோது கூட ஆபாசப் படம் பார்த்து கொண்டிருந்த பின்லேடன்.


avatar

ஆபாசப் பட நடிகை சன்னி லியோனின் வெறித்தனமான ரசிகர் ஒசாமா பின்லேடன். சன்னி லியோனின் ஆபாசப் பட வீடியோக்களை வெறித்தனமாக பார்த்து ரசித்து வந்தார் பின்லேடன்.

அமெரிக்கப் படையினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட போது கூட அவர் சன்னி லியோன் வீடியோவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார் என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

உலகை மட்டுமல்லாமல், அமெரிக்காவையே நடுநடுங்க வைத்த தீவிரவாதி ஒசாமா பின்லேடன். இவனைப் பிடிக்க அமெரிக்காவைப் போல யாருமே பணத்தை வாரியிறைத்திருக்க மாட்டார்கள். கடைசியில் பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் வைத்து பின்லேடனை சுட்டுக் கொன்றனர் அமெரிக்க வீரர்கள்.

அதன் பின்னர் பின்லேடன் வீட்டில் என்னென்ன இருந்தது என்பது குறித்து அமெரிக்கத் தரப்பில் சில தகவல்கள் வெளியிடப்பட்டன. பின்லேடன் வீட்டில் வயாகரா இருந்தது. ஆபாசப் பட வீடியோக்கள் இருந்தன என்றெல்லாம் கூறப்பட்டது.

இந்த நிலையில் ராம்கோபால் வர்மா, இதுவரை யாருமே சொல்லிடாத ஒரு புத்தம் புதிய தகவலை, அதுவும் பரபரப்பான தகவலை கூறி அனைவரையும் திகிலடைய வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள டுவீட்டர் செய்தியில், அபோதாபாத் வீட்டில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபோது அவரது வீட்டில் ஏகப்பட்ட சன்னி லியோன் ஆபாசப் பட வீடியோக்கள் சிடி இருந்தது தெரிய வந்தது.

மேலும், பின்லேனை அமெரிக்கப் படையினர் சுற்றி வளைத்துக் கொன்றபோது கூட அவர் சன்னிலியோன் வீடியோவைத்தான் பார்த்துக் கொண்டிருந்ததாக எனக்குத் தெரிந்த நம்பகமான தகவல் தெரிவித்துள்ளது என்று கூறியுள்ளார் ராம் கோபால் வர்மா.


இப்படிப்பட்ட ´அதி´முக்கியமான தகவலை ராம் கோபால் வர்மாவுக்குக் கொடுத்தது யார் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!