முரட்டு காளை (NEW) - தினமலர் விமர்சனம்


avatar

முரட்டு காளை (NEW) - தினமலர் விமர்சனம் Vm_13210
பழைய முரட்டுக்காளையோட ரீ-மேக்தான் இந்த புதுமுரட்டுக்காளை. நிலம், பணம்னு வசதி வாய்ப்போட இருக்கிற காளையனுக்கு (சுந்தர்.சி) நாலு பாசக்கார தம்பிகள். (ஆனா, அவங்க ஏன் அரை டவுசரோடவே சுத்துறாங்கன்னு தெரியல!) ஊர் திருவிழாவுல நடக்கிற ரேக்ளா பந்தயத்துல ஜெக்கிற காளையன் மேல பணக்காரர் வரதராஜனோட (சுமன், தங்கச்சி ப்ரியாவுக்கு (சிந்து துலானி) காதல். காளையனோட நிலத்து மேல வரதராஜனுக்கு காதல். குதர்க்கமா திட்டம் போட்டு தங்கச்சிக்கு மாப்பிள்ளை கேட்டு காளையன்கிட்டே போறார் வரது. காளையனும் சம்மத‌ிக்க கோயில்ல நிச்சயதார்த்ததுக்கு ஏற்பாடு நடக்குது. அப்போ தற்செயலா, கல்ய‌ாணத்துக்கு பிறகு காளையன்கிட்டே இருந்து தம்பிகளை பிரிச்சுடுவேன்னு ப்ரியா, தோழிகள்கிட்டே சொல்றதையும் கேட்கற காளையன், கோபமாகி நிச்சயதார்த்தத்தை நிறுத்துறார்.

இதுக்கு இடையில ஆதரவில்லாத பொண்ணு புவனா(சினேகா) மேல வரதுக்கு ஆசை வந்து தன்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துறார். அவர்கிட்டே இருந்து தப்பிச்சு காளையன்கிட்டே அடைக்கலம் ஆகுறாங்க புவனா.‌ ரெண்டு பேருக்கும் காதல் வந்து, 2 டூயட்டையும் பாடிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்!னு மேடையில உட்கார்ற காளையனை, வரதுவோட ஆளை கொலை பண்ணிட்டதா சொல்லி கைது பண்ணி கூட்டிட்டு போறாங்க போலீஸ். இது வரதுவோட ஏற்பாடுன்னு புரிஞ்சுக்கிற காளையன் போலீஸ்கிட்டே இருந்து தப்பிக்கிறார். அவரைத்தேடி வரதராஜன் கிளம்புறார். ரயில் மேல, காட்டுக்குள்ளே, ஊருக்குள்ளேன்னு ஓடி ஓடி சண்டை போடுறாங்க. ‌க‌ாளையன் திரும்பி வந்து புவனாவை கல்‌யாணம் பண்ணினாரா...? வரதராஜன் என்னவானார்...?ங்கற கேள்விகளுக்கு நம்ம பொறுமைய சோதிச்சு பதில் சொல்றாங்க.

படம் கோர்வையே இல்லாம துண்டு துண்டா இருக்கறது... திருப்பம்ங்கற பேர்ல திடீர் திடீர்னு கதாபாத்திரங்கள் வந்து போறது... எந்த கதாபாத்திரத்துக்கும் தெளிவான பின்னணி இல்லாததுன்னு படத்துல குழப்பமான விஷயங்கள் ஏராளம். எல்லாருக்கும் தெரிஞ்ச கதையை திரும்ப எடுக்கும்போது திரைக்கதையில் ரொம்பவே கவனமா இருந்திருக்கணும். அது இங்கே மிஸ்ஸிங். மொத்தத்துல் படம் நல்லா இருக்குன்னு சொல்ல படத்துல ஒரு காட்சியும் இல்ல!

மொத்தத்தில், "முரட்டுக்காளை" - "வீரியமில்லா காளை"

ரசிகன் குரல் - பழைய கதையை அப்படியே எடுத்துவங்க அதே விறுவிறுப்போட எடுக்கலையே!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!