மனம் கொத்தி பறவை - தினமலர் விமர்சனம்


avatar

மனம் கொத்தி பறவை - தினமலர் விமர்சனம் Vm_14110
"மெரினா" படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் படம் மனம் கொத்தி பறவை. "துள்ளாத மனமும் துள்ளும்" படத்தின் மூலம் நடிகர் விஜய்க்கு பெரிய பிரேக் ‌ஏற்படுத்தி தந்த இயக்குநர் எஸ்.எழில் இயக்கத்தில் சற்று பெரிய இடைவெளிக்குப்பின் வெளிவந்திருக்கும் திரைப்படம் என ஏகப்பட்ட சிறப்புகளுடன் வெளிவந்திருக்கும் காதல் ப(பா)டம் தான் "மனம் கொத்தி பறவை" என்றால் மிகையல்ல!

கதைப்படி வேறு வேறு சமூகத்தை சேர்ந்த எதிர், எதிர் வீட்டைச் சேர்ந்தவர்கள் நாயகன் சிவகார்த்திகேயனும், புதுமுக நாயகி ஆத்மியாவும் சின்ன வயதில் இருந்து ஒன்றாக படித்து வளர்ந்த நாயகி மீது நாயகருக்கு காதல் என்றால் அப்படி ஒரு காதல்! ஆனால், கல்விதரத்திலும், வாழ்க்கை தரத்திலும், சமூக அந்தஸ்த்திலும் மிகவும் உயர்ந்த நாயகியிடம் தன் காதலை சொல்ல நாயகருக்கு பயங்கர தயக்கம்! ஆனால், நாயகி நட்பாக தன்னிடம் பழகுவதை எல்லாம் தன் ஆண் நட்பு வட்டாரத்தில் தப்பாக இல்லை, இல்லை... காதலாக கலந்துகட்டி சொல்லும் நாயகர் தனது பொய்களாலேயே நாயகியின் திருமணம் நின்று போக காரணமாகிறார். அப்புறம்? அப்புறமென்ன...? நாயகிக்கும், நாயகர் மீது காதல் இருந்ததா? இல்லையா...? உற்றார், ஊரார் எதிர்ப்பையும் மீறி நாயகனும், நாயகியும் இணைந்தார்களா...? இல்லையா...? என்பது மனம் கொத்தி பறவை படத்தின் பக் பக் மீதிக்கதை!

கண்ணனாக, காதலனாக, கதாநாயகராக சிவகார்த்திகேயன் வாழ்ந்திருக்கிறார். தன் தந்தை இளவரசு சொல்லும் வேலைகளை தட்டிக்கழித்தும், எதிர்வீட்டு நாயகியின் குடும்பத்தார் சொல்லும் காரியங்களை "எள்" என்பதற்குள் எண்ணெய் ஆக்கி முடிப்பதுமாக கலக்கி இருக்கிறார் சிவகார்த்தி! நம் பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருந்தும் சிவகார்த்தி ஏனோ தெரியவில்லை... ஹீரோவாக நம் மனதில் ஒட்ட மறுப்பது சற்றே மைனஸ்! மற்றபடி ஓ.கே.!!

ரேவதி பாத்திரத்தில் வரும் ஆத்மியா பற்றி ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் "ஆத்ம" திருப்தியா!

சிங்கம் புலி, பரோட்டா சூரி, வெண்ணிறை ஆடை மூர்த்தி, சாமஸ், ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் காமெடிக்கு கியாரண்டி கூறுகிறார்கள். பலே! பலே! இளவரசு, ரவிமரியா, கி‌ஷோர், ஆடுகளம் நரேன், வனிதா உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

டி.இமானின் இசையில் "டங்... டங்..." மற்றும் "போ போ... போ..." உள்ளிட்ட பாடல்கள் படத்தின் பெரியபலம்! சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவு ஆஹா ஓஹோ பதிவு!

"காதலுக்கு மரியாதை" க்ளைமாக்ஸை மீண்டும் ஒரு முறை க்ளைமாக்ஸ் ஆக்கியிருப்பதை மட்டும் இயக்குநர் எஸ்.எழில் தவிர்த்திருந்தார் என்றால் "மனம் கொத்தி பறவை" மேலும் பெருவாரியான ரசிகர்களின் மனங்களை கொத்திப் பறந்திருக்கும் எனலாம்!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!