உருமி - தினமலர் விமர்சனம்


avatar

உருமி - தினமலர் விமர்சனம் Vm_11210
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில், வி.கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்திருக்கும் சரித்திரப்படம் தான் "உருமி!"

கதைப்படி கடல் விஞ்ஞானம், கடல்பிரயாணம், கடல் வாணிபம் என உலகம் முழுக்க கப்பலில் சுற்றி, பல நாடுகளை கண்டறிந்த வாஸ்கோடகாமா, இந்தியாவை இங்கிலாந்துகாரர்கள் அடிமைப்படுத்தி ஆள்வதற்கு முன்பாகவே கண்டுபிடித்து கால்பதித்து, கடல் வணிகம், மிளகு ஏற்றுமதி எனும் பெயரில் கேரள குறுநில மன்னர்களை அடிமைப்படுத்தி, தன் ராஜாங்கத்தை கட்டவிழ்த்து விட்ட கதையோடு, சில கற்பனை கதைகளையும் கலந்து கட்டி உள்ளே சேர்த்து உலவவிட்டு "உருமி"யை உரும செய்து, உறுதிப்பட தென் இந்தியர்களின் வீரத்தையும், ஈரத்தையும் பிரம்மாண்டமாக பறைசாற்றியிருப்பதில் ஈர்க்கிறார் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கம் இயக்குநர் சந்தோஷ் சிவன்.

இந்தியர்களுக்கு குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் இயக்குநரின் கதையையும், கற்பனையையும் ஒருசேர புரிந்து கொண்டு பிரபுதேவா, ஆர்யா, ப்ருதிவிராஜ், அலெக்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் மட்டுமின்றி ஜெனிலியா, வித்யாபாலன், தபு, நித்யா மேனன் உள்ளிட்ட நடிகைகளும் கதை நடைபெறும் காலத்து பாத்திரங்களாகவே பளிச்சிட்டிருக்கின்றனர்.

சந்தோஷ் சிவனின் காமிராவில் மேற்கண்ட நட்சத்திரங்கள் மட்டுமல்ல, செயற்கையான செட்டுகள், இயற்கை எழில் கொஞ்சும் வளங்கள்,‌ போர்முனைக்கு வரும் குதிரைகள், யானைகள், வெள்ளைக்காரர்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்டடுகள் உள்ளிட்ட எல்லாமும், எல்லோரும் பிரமாதமாக பிரம்மாண்டமாக பளிச்சிட்டிருக்கின்றனர், பளிச்சிட்டிருக்கின்றன... என்றால் மிகையல்ல!

வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு தீபக் தேவ்வின் இசை பாடல்களில் மட்டுமின்றி பின்னணியிலும் பிய்த்து பெடலெடுத்து விடுகிறது பேஷ், பேஷ்! ஸ்ரீதர் பிரசாத்தின் படத்தொகுப்பு, அனல் அரசுவின் சண்டைபயிற்சி உள்ளிட்டவைகளும் படத்தின் பெரிய பலம்!

ஒவ்‌வொரு காட்சியையும் உயிரைக்‌ கொடுத்து படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் சந்தோஷ் சிவனுக்கு எத்தனை சபாஷ்கள் சொன்னாலும், எத்தனை விருதுகள் கொடுத்தாலும் அது சாதாரணமானது!

மொத்தத்தில் "உருமி" - "பெருமி(தம்)!"

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!