கண்டதும் காணாததும் - தினமலர் விமர்சனம்


avatar

கண்டதும் காணாததும் - தினமலர் விமர்சனம் Vm_15310
நடிப்பு, இயக்கம், தொழில்நுட்பம், தயாரிப்பு என எல்லாவற்றிலும் புதுமுக கூட்டணியின் புரியாத புதிரான மற்றுமொரு தமிழ்படம் கண்டதும் காணாததும்!.

நாயகன் விகாஷூம், நாயகி சுவாஷிகாவும் காதலிக்கிறார்கள். அவர்களது காதலை வில்லன் பிரிக்கிறார்! வில்லன் வேறுயாருமல்ல... விகாஷின் அவசரபுத்திதான்! அவரது அவசர புத்திக்கு அவர்களது காதல் எவ்வாறு பலிகடாவாகிறது...?! என்பது தான் "கண்டதும் காணாததும்" படத்தின் கருத்தாழமிக்க மீதிக்கதை! மொத்த கதை எல்லாமும்!

புதியவர் விகாஷ், புதுமுகம் சுவாஷிகாவின் நடிப்பு, துடிப்பு, பரோட்டோ சூரியின் காமெடி, கடி எல்லாம் படத்தின் பலம், பலவீனம் இரண்டும் என்றால் மிகையல்ல. புதியவர்கள் சார்லியின் இசை, சீலனின் இயக்கம் உள்ளிட்டவைகளால் முன்பாதியை விட பின்பாதியில் சற்றே கவன ஈர்ப்பு செய்யும் "கண்டதும் காணாததும்" தமிழ் சினிமாவில் இதுவரை வந்ததும் வராததுமான காட்சியமைப்பு கதையம்சங்களுடன் தனித்து நிற்கிறது! தவித்தும் நிற்கிறது!!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!