ஸ்ரீதர் - தினமலர் விமர்சனம்


avatar

 ஸ்ரீதர் - தினமலர் விமர்சனம் Vm_16510
ஒரு ஆணும், பெண்ணும் எந்த பிரச்னையும் இல்லாம நட்போட இருக்க முடியுமா...? இந்த கேள்வியும், கேள்விக்கான பதிலும்தான்... ஸ்ரீதர். ஓ மை ப்ரெண்ட் தெலுங்கு படத்தோட தமிழ் மொழிபெயர்ப்பு.

ஸ்ரீதரும்(சித்தார்த்), ஸ்ரீதேவியும் (ஸ்ருதிஹாசன்) சின்ன வயசுல இருந்தே நண்பர்கள். படிப்பை விட்டுட்டு கிடார் கத்துக்கிட்டு, இசைத்துறையில சாதிக்கணும்னு ஆசைப்படுறாரு ஸ்ரீதர். இது பிடிக்காத ஸ்ரீதரோட அப்பா (தணிகல பரணி), அவரை காய்ச்ச... ஸ்ரீதர் ஜெயிக்கறதுக்கு நான் கேரண்டி அங்கிள்ன்னு ஸ்ரீதேவி நம்பிக்கை கொடுக்கறாங்க. இது ஒருபக்கம் இருக்க, ஒரு சுபயோக சுபதினத்துல ரீத்துவை (ஹன்சிகா) நடுரோட்டுல பார்த்து, அவங்க அழகுல மயங்கி காதல் வயப்படுறாரு ஸ்ரீதர். இந்தபக்கம் ஸ்ரீதர் தன்னை கண்டுக்கறதே இல்லைன்னு கோபத்துல கொந்தளிக்கறாங்க ஸ்ரீதேவி. ஆனா... நம்ம நட்புக்கு என் காதல் குறுக்க வரும்னா, அது எனக்கு தேவையில்லை!ன்னு ஸ்ரீதர் சொல்ல, ஸ்ரீதேவி அப்படியே உருக, அந்த நேரத்துல கதைக்குள்ளே என்ட்ரி ஆகறாரு ஸ்ரீதேவியோட அமெரிக்க காதலன் உதய்(நவ்தீப்).

ஸ்ரீதருக்கும், ஸ்ரீதேவிக்கும் இடை‌யில இருக்கற ஆழகமான நட்பை... உதய்யும், ரீத்துவும் ரொம்ப தொந்தரவா நினைக்கிறாங்க. உதய் ஒருபடி மேலே ‌போய் அவங்க நட்பை சந்தேகப்படுறாரு. இந்த சூழல்ல, நீங்க ரெண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு ஸ்ரீதர்/ஸ்ரீதேவியோட பெத்தவங்களும் கேட்க... தங்களோட நட்பை களங்கமில்லாம காப்பாத்த ஸ்ரீதரும், ஸ்ரீதேவியும் என்ன முடிவு எடுக்கறாங்கன்னு க்ளைமாக்ஸ் சொல்லுது.

யார் என்ன சொன்னாலும் தனக்கு பிடிச்சதை மட்டும் செய்ற டோன்ட் கேர், கதாபாத்திரத்துல சித்தார்த் சிறப்பா நடிச்சிருக்காரு. தனக்கும் ஸ்ருதிக்குமான நட்பை அப்பாவுக்கு புரியவைக்கும் போது நெகிழ வைக்கிறாரு. சித்தார்த்தை செல்லமா திட்டி உதைக்கும்போதும், தன்னம்பிக்கை வார்த்தைகள் பேசும்போது, நட்பை விட்டுக் கொடுக்க முடியாம தவிக்கும் போதும்.... சூப்பர் ஸ்ருதி. குறைன்னா... தெலுங்கு வாயசைப்போட ஒண்ணா சேர முடியாம திண்டாடுற தமிழ் மொழிபெயர்ப்பு கொஞ்சம் உறுத்தலா இருக்கு. மத்தபடி... ஆண் - பெண் நட்பு புனிதமானது!ன்னு அழுத்தமா சொன்னதுக்காக நிச்சயம் படத்தை பாராட்டியே ஆகணும்.

மொத்தத்தில் "ஸ்ரீதர்" - "நட்புக்கு மரியாதை"

ரசிகன் குரல் - ஹீரோன்னாலே கிடார்தான் வாசிக்கணுமா...? ஏன் தவில், நாதஸ்வரமெல்லாம் வாசிக்கக் கூடாதா...?!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!