மை - தினமலர் விமர்சனம்


avatar

மை - தினமலர் விமர்சனம் Vm_11510
கட்சி மேடைகள்ல சுனாமி சுப்பு (விஷ்ணு ப்ரியன்) மைக் பிடிச்சு பேச ஆரம்பிச்சா, கேட்டுக்கிட்டு இருக்கறவன் வேட்டியில தீ பத்திக்கும். அந்தளவுக்கு தீயாக பேசக்கூடிய ஆளு. அதுக்காக அவரை அரசியல்வாதின்னு நினைச்சுட வேண்டாம். கட்சிக்கூட்டங்கள்ல பெரிய தலைகள் வர்ற வரைக்கும் கூட்டம் கலையாம பார்த்துக்கற ஒரு டைம்பாஸ் பேச்சாளர். அம்புட்டுதான்! இந்த சுப்புவுக்கும், பத்துக்கு பத்து ரூம்ல ஒரு லோக்கல் சேனல் நடத்திட்டு, அதை ஸ்டார் டிவி மாதிரி ஆக்கணும்!ங்கற கனவோட இருக்கற பானுமதிக்கும் (ஸ்வேதா பாசு) படம் ஆரம்பிச்சு ஒரு ஒன்றரை மணி நேரம் கழிச்சு கல்யாணம் நடக்குது. அப்போ... கல்யாணத்துக்கு முன்னாடி? கல்யாணத்துக்கு அப்புறம்?

கட்சிக்கூட்டம் இருக்கிற நாட்கள்ல பணத்துக்கு பஞ்சமில்லாம சுத்தற சுப்பு, மந்தநாட்கள்ல, திருட்டு வேட்டைக்கு கிளம்பிடுவாரு. அப்படி ஒரு நல்ல மனுஷன். இந்த சுப்புவுக்கு ஒரு சூப்பர் ப்ளாஷ் பேக்! சின்னவயசுல மக்காச்சோளத்துக்காக எதையும் துணிஞ்சு செய்ற சுப்பு... தன் தோழியான எட்டு வயசு பானுமதிக்கும் தனக்கும் இருந்த நட்பை நண்பர்கள்கிட்ட அசிங்கப்படுத்த, பானுமதி சண்டை போட்டு கா விட்டுட்டு பிரிஞ்சுடுறாங்க. ஆனாலும் பானுமதி அப்பாகூட தொடர்புலேயே இருக்கற சுப்பு, 20 வருஷத்துக்கு அப்புறம் பானுமதியோட மனசை மாத்துறாரு. சுப்புவை திருத்தி நல்ல வழிக்கு கொண்டு வரணும்!னு நினைக்கிற பானுமதி, பிணம் கூட எரியுறப்போ எழுந்து நிக்குது! நீ உயிருள்ள மனுஷன், எழுந்து நிற்கணுமா? இல்ல... எரிஞ்சு சாம்பலாகணுமா?ன்னு முடிவு பண்ணிக்கோ!ன்னு சொல்ல... இடைவேளை.

நாம பாரத்தை இறக்கிட்டு வர்றதுக்குள்ள, சுப்பு மனசுல அப்படி ஒரு மாற்றம். தீவிர அரசியல்ல இறங்கிடலாம்!ன்னு முடிவெடுத்து தன்னை மேடையேத்தி தனக்கு மைக் கொடுத்த கட்சி தலைவன்கிட்டேயே போய் கவுன்சிலர் வாய்ப்பு கேட்க, தலைவன் அவமானப்படுத்தி அனுப்புறான். கோபப்பட்ட சுப்பு சுயேச்சையா நின்னு ஜெயிக்க, பானுமதியை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஊருக்கு நல்லது பண்றாரு. இதனால கோபப்படற ஊருக்கு நல்லது பண்றாரு. இதனால கோபப்படற தலைவனை புத்திசாலித்தனமா(!) காலி பண்றாரு. இப்படி மக்கள்கிட்ட ஓட்டு வாங்கி ஹீரோ தீவிரமா அரசியல் பண்றதால... படத்துக்கு பேர் மை.

பழைய கதை. பலவீனமான திரைக்கதை. ஆனாலும், இது மோசம்ன்னு சொல்ல முடியாத அளவுக்கு படத்துல எல்லாக் காட்சிகளும் நல்லாவே இருக்கு. நடிகர்கள்ல தொடங்கி ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர்ன்னு அத்தனைபேரும் தங்களோட வேலையை சரியா பண்ணியிருக்காங்க. ஆனாலும் படம் பார்த்த திருப்தி இல்லை.


மொத்தத்தில் "மை" - "மனதிலும் ஒட்டாத மை"

ரசிகன் குரல் - எல்லா சீனும் எங்கேயோ பார்த்தமாதிரியே இருக்குதே!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!