அடுத்தது - தினமலர் விமர்சனம்


avatar

அடுத்தது - தினமலர் விமர்சனம் Vm_15211
தமிழ்ல குறைஞ்ச செலவுல த்ரில்லர் படம் எடுத்தா கதை என்னவா இருக்கும்? ஊரை விட்டு ஒதுக்குப்புறமா ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு பங்களாவுக்கு 4,5 ‌பேர் போவாங்க... அவங்க வரிசையா சாகடிக்கபடுவாங்க. கடைசியில அவங்களை கொன்னது யாரு? காரணம் என்ன?னு காட்டுவாங்க. ‌கரெக்ட்! அடுத்தது படத்தோட கதையும் அதுதான். என்ன.., 4,5 பேருக்கு பதில் 10 பேர் ஒதுக்குப்புற பங்களாவுக்கு பதில் தீவுல இருக்கற ஒரு பங்களா.

ஆள் இல்லாத தீவுல இருக்கற ஒரு பங்களாவுல தனியா(?) 10 நாள் தங்கியிருந்தா 10 கோடி ரூபாய் ஜெயிக்கலாம்!ன்னு ஒரு டி.வி.யில போட்டி நடத்துறாங்க. அதுல கலந்துக்க சமையல்காரன் (வையாபுரி), டாக்டர் (இளவரசு), வக்கீல் (மீனாள்), லோக்கல் ஏரியா பெண் (ஆர்த்தி), கடத்தல்காரன் (ஸ்ரீமன்)... இப்படி 10 பேர் தேர்வாகுறாங்க. டி.வி. நிகழ்ச்சியை காரணமா வைச்சு இங்க கூட்டிட்டு வந்து கொலை பண்றாங்க!ங்கறது தீவுக்கு வந்து அடுத்தடுத்து ரெண்டு கொலைகள் விழுந்ததும் தான் இவங்களுக்கு தெரிய வருது. தப்பிச்சு போக வழியில்லாத நிலைமையில் ஒவ்வொருத்தரா சாகறாங்க. இதுக்கிடையில இவங்களை சாகடிக்கிறதுக்கான காரணத்தை திரைபோட்டு காட்டுகிறார் கொலைகாரர்(நாசர்). எத்தனை பேர் தப்பிச்சாங்க?ங்கறது மீதி கதை.

ஜென்ம நட்சத்திரம், நாளைய மனிதன் மாதிரி பெரிய த்ரில்லர் படங்களை எடுத்த இயக்குனரோட படமா இது! நல்லா இருக்குன்னு சொல்ல படத்துல ஒரு விஷயம்கூட இல்லை. நாடகத்தன்மையான நடிப்பு, சுவாரஸ்யமே இல்லாத திரைக்கதைன்னு படம் முழுக்க குறைகள் அதிகமா தெரியுது. பெயரளவுக்கு கூட படத்துல லாஜிக் இல்லை. கேமராவும், பின்னணி இசையும் தான் த்ரில்லர் படத்துக்கு பலமே! இங்கே இரண்டுமே பெரிய சொதப்பல். குறிப்பா கேமரா... 3டி படத்தை கண்ணாடியை கழட்டிட்டு அவுட் ஆப் போகஸ்! நாசர், இளவரசு, வையாபுரின்னு நல்ல நடிகர்கள் இருந்தும் யாருக்கும் நடிக்கறதுக்கு படத்துல வாய்ப்பு இல்லை.


மொத்தத்தில் அடுத்தது, பயங்கரமான படம் ஜாக்கிரதை

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!