போஸ்ட் புரொடக்‌ஷன்


Gulzaar

சினிமா இயக்குனராவதும்,.சினிமா குறித்த தேடல்களும்,சினிமா பற்றிய அறிவும் அதிகமாகி வரும் காலம் இது.

பல கல்லூரிகளில் சினிமா சார்ந்த விஷிவல் கம்யூனிகேசன் துறையில் மாணவர்கள் குவிந்தும் வருகிறார்கள்..

ஒரு சினிமாவை சார்ந்து எத்தனை துறைகள் இருக்கிறது தெரியுமா..? கிட்டத்தட்ட 24 துறைகள்…[ 24 grafts ] திரைப்பட தயாரிப்பாளர்களை தொடர்ந்து..

திரைப்பட இயக்குனர்கள்
திரைப்பட ஒளிப்பதிவாளர்கள்
திரைப்பட தொகுப்பாளர்கள்
திரைப்பட எழுத்தாளர்கள்
திரைப்பட கலை இயக்குனர்கள்
திரைப்பட இசையமைப்பாளர்கள்
திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள்
திரைப்பட ஸ்டில் கேமராமேன்கள்
திரைப்பட ஒப்பனை கலைஞர்கள்
திரைப்பட தையற்கலைஞர்கள்
திரைப்பட நடனக் கலைஞர்கள்
திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர்கள்
திரைப்பட ஒலியாளர்கள்
திரைப்பட பிண்ணனிக்குரல் கலைஞர்கள்
திரைப்பட செட்டிங்ஸ் ஒர்க்கர்ஸ்
திரைப்பட லைட்ஸ் மேன்ஸ் ஒர்க்கர்ஸ்
திரைப்பட யூனிட் டெக்னிசியன்ஸ்
திரைப்பட உதவி நிர்வாக ஊழியர்கள்
திரைப்பட சக நடிகர்கள்
திரைப்பட துணை நடிகர்கள்
திரைப்பட வாகன ஓட்டுனர்கள்
திரைப்பட நளபாக ஊழியர்கள்
திரைப்பட பெண் ஊழியர்கள்
திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள்
என்ன மலைப்பாக இருக்கிறதா…?

ஏன் ஒரு சினிமா முழுக்க முழுக்க இயக்குனரை சார்ந்தே இருக்கிறது? எதற்காக ஒரு இயக்குனரை CAPTAIN OF THE SHIP என அழைக்கப்படுகிறார்..? மேலே கூறிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களையும் ஒருங்கிணைத்து ஒரு சினிமாவை உருவாக்குவது ஒரு இயக்குனர் என்பதால் தான்..!

அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் படப்பிடிப்பு முடிந்த அன்று இரவே கிளம்பி அடுத்த படத்துக்கான பணிக்கு செல்ல இயலும்,.ஆனால் ஒரு இயக்குனர் ,ஒரு திரைப்படம்,கதை விவாதத்தில் ஆரம்பித்து , முதல் பிரதி எடுத்து தியேட்டர் சென்று அடையும் வரை அவரின் பணி தொடர்கிறது,.! ஏற்கனவே சினிமா உதவி இயக்குனர்களுக்காக நான் எழுதிய புத்தகமான ``நீங்களும் இயக்குனராகலாம்’’ நக்கீரன் வெளியீடாக,..மூன்றாம் பதிப்பை நோக்கி செல்லும் இந்த வேளையில்,..அதன் தொடர்ச்சியாக,. சினிமா,.போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளான

எடிட்டிங் டெக்னாலஜி, [EDITING TECHNOLOGY ]
ரீ-ரிகார்டிங்க் [RE-RECORDING]
சிறப்பு சப்தம் [ EFFECTS ]
D.T.S. / 5.1 SOUND MIXING
D.I. [ கலர் கரெக்‌ஷன் ]
கிராபிக்ஸ் பணிகள்
DIGITAL FILM CONVERSION
நேரடி பிரிண்ட்
பணிகள் பற்றியும்,இன்றைய டிஜிட்டல் சினிமா மற்றும் சினிமா இன்று எப்படி தியேட்டருக்கு வந்து சேர்கிறது என்பது வரை விரிவாக ஒரு கட்டுரை தொடரைத் தரலாம்,.என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கிறேன்…! அடுத்த தொடரில் சந்திக்கலாம்……………………………………………….!

hellotamilcinema.com

Gulzaar

2.EDITING TECHNOLGY

படப்பிடிப்பு தளத்தில் எழுதப்படும் ,எடிட்டிங் நோட்ஸ்,.அன்று இரவோ ,அல்லது அந்த செட்யூல் முடிந்தவுடனோ ,.தொகுக்கப்பட்டு எடிட்டர் கரங்களுக்கு வந்து சேரும்,.

முன்பெல்லாம்,.முழுக்க முழுக்க பிலிமில் மட்டுமே சினிமா எடுக்கப்பட்டதால்,.தினசரியோ,.அல்லது 2,3 நாட்களுக்கு ஒரு முறையோ,.படமாக்கப்பட்ட பிலிம் சுருள்கள் பத்திரமாக லேப்புக்கு வந்து சேரும்,.வெளிப்புற படப்பிடிப்பு எனில் பிலிமிற்காக மட்டுமே ஒரு ஏ.சி.கார் ஏற்பாடு செய்யப்பட்டு வெளியூரிலிருந்து சென்னை வந்து சேரும்,.அது போலேவே படமாக்கப்படாத பிலிம் சுருள்களும் [RAW FILM ] இதே முறையில் போய்ச் சேரும்,,.கிட்டத்தட்ட அந்த நெகட்டிவ்களுக்கு மிலிட்டரி பாதுகாப்பு போல் ஒரு பாதுகாப்பை அந்தந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகிகள் மேற்கொள்வர்,.ஏனென்றால் அந்த நெகட்டிவ்களில் தான் நாம்

செலவு செய்த அனைத்து ஷீட்டிங் செலவுகளும் பிலிமாக மாறி இருக்கிறது,..!சினிமாவிற்கு புதிதாக வந்த ஒரு தயாரிப்பாளர்,.படம் பிடிக்கப்பட்டு தனது ஏ.சி.அறையில் வைத்து செல்லப்பட்ட ஒரு பிலிம் சுருளின் அளவை மேனேஜரிடம் கேட்டாராம் அவரும் பொறுப்பாக 400 அடி சார் என்று கூறிச் சென்று விட்டாராம்,.அவர் சென்றவுடன் அவரின் நேர்மையை பரிசோதிக்க எண்ணிய தயாரிப்பாளர்,.உடனே செய்த வேலையினால் ,.அவருக்கு நஷ்டம் கிட்டத்தட்ட 3 லட்சங்கள்,..அப்படி என்ன செய்தார் என்று தானே கேட்கிறீர்கள்..?மேனேஜர் சொன்ன 400 அடி சரியாக இருக்கிறதா என ஒரு பிலிம் சுருளை திறந்து ஸ்கேல் கொண்டு அளந்து இருக்கிறார் ,..!சாதரணாமாக ஹாட்ஸாட் கேமராவில் இருக்கும் 100 ரூபாய் பிலிமிற்கு இருக்கும் நிலை தானே 15,000 ரூபாய் பிலிமிற்கும் என்பது பாவம் அந்த தயாரிப்பாளருக்கு தெரியாமல் போன தற்கு அந்த தயாரிப்பு நிர்வாகி

என்ன செய்வார் பாவம்..!

இப்படி வரப்பட்ட பிலிம் சுருள் லேப்பில் இருந்து,கழுவப்பட்டு,பாஸிட்டிவ் நெகடிவாக மாற்றப்பட்டு,.எடிட்டரின் கைக்கு வந்து சேரும் ,.எடிட்டரும் எடிட்டிங் ரிப்போர்ட்படி ஒரு ஆர்டர் செய்து,.வைப்பார்.இதனுடன் நாகரா எனப்படும் ஷீட்டிங் ஸ்பாட்டில் வசனங்களை பதிவு செய்யும் டேப் பிலிம்,.

சவுண்ட் நெகட்டிவ்வாக மாற்றப்பட்டு அதுவும் எடிட்டர் கைக்கு வந்து சேரும்

இப்போது ஓ.கே..ஆன டேக்குகளை மட்டும் வெட்டி,.அதனுடன் சவுண்ட் நெகடிவை ஒப்பிட்டு ஒருமுகப் படுத்துவார்.

இப்போது ஸ்டீன்பேக் [STEENBECK EDITING MACHINE ]எனப்படும் எடிட்டிங் மெஷினில் ,இரண்டு நெகட்டிவ்களையும் ஒரே மாதிரி ஒருங்கிணைத்து ..ஒரு குட்டி திரையில் கிட்டத்தட்ட தியேட்டர் எஃபெக்ட்டில் முன் பின் ஓட விட்டு, கதைக்கு தகுந்தார்போல் தகுதியுள்ள ஷாட்களை மட்டும் இயக்குனரின் ஒப்புதலுக்கு பின்,.ஓ.கே செய்வார் எடிட்டர்,.[பார்க்க STEENBECK படங்கள் ]

முதலிலேயே ஷீட்டிங்ஸ்பாட்டில் ஓ.கே.செய்யப்பட்ட ஷாட்டுகள் மட்டுமே[அப்போது] பாஸிட்டிவாக மாற்றப்படும் என்பதால்,.அப்பொழுது

இயக்குனருக்கும்,எடிட்டருக்கும் அதிக குழப்பம் நேர்ந்ததில்லை..

ஒரே ஷாட்டுகள் அதிகபட்சம் 2, 3 ஷாட்டுகள் ஓ.கே செய்யப்படிருந்தால்,..எது மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோ அது ஓ.கே,.செய்யப்பட்டு இறுதி வடிவத்துக்கு கொண்டு செல்லப்படும்,.!

hellotamilcinema.com

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!