"இசையமைப்பாளனாக வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தக் கூச்சமாகவே இருந்தது".


Gulzaar

ஆசையில் சென்னைக்கு வந்துவிட்டோம். நாடகம், கச்சேரி என்று வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக வந்தன. ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டேன். ஆனால் நான் கற்பனை செய்துவைத்திருந்த சினிமா இசைக்கும், நடைமுறையில் தொழிலாக நடத்தப்பட்ட சினிமா இசைக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.

உடனே இசையமைப்பாளனாக வேண்டும் என்ற என் ஆசையை மூட்டைகட்டி மூலையில் தூக்கிப் போட்டுவிட்டேன். ஆகாயக்கோட்டை கட்டி அதை இடித்ததைப்போல என் மனதில்

எந்தவித இழப்பும் – வருங்காலம் பற்றிய எந்தக் கனவும் உணரப்படவில்லை.

முதலில் இசையை {இந்த வார்த்தை பயன் படுத்தியதால் எச்சரிக்கப் படுகிறீர்கள்}ங்காகக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று முடிவுசெய்தேன். உதவி இசையமைப்பாளன் என்று சொன்னேனே தவிர, சங்கீதத்தில் எனக்கு ‘ஸா’வும் தெரியாது… ‘பா’வும் தெரியாது.

ஆனால் ஹார்மோனியத்தைக் கையில் கொடுத்து என் முன்னால் யாராவது பாடினால் என்னுடைய முனைப்பு இன்றி, பாடுகிறவர்கள் எதைப் பாடுகிறார்களோ அந்த ஸ்வரத்தில் என் கைவிரல்கள் தன்னாலேயே போய் நிற்கும். டேப்ரிக்கார்டர் இல்லாத அந்தக்காலத்தில், ஜி.கே.வி., எத்தனை டியூன் கம்போஸ் செய்தாலும், எந்தவித ஸ்வரக்குறிப்பும் இன்றி – அடுத்த நாள் அத்தனை ட்யூனையும் அப்படியே ஒப்பிப்பேன். பாடலைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நீதான் ஸ்வரங்கள் சொல்லவேண்டும் என்பார் அண்ணன் ஜி.கே.வி. ட்யூனை வீட்டுக்குச் சென்று ஞாபகப்படுத்தி, இதில் எது ஸட்ஜமம், பஞ்சமம் என்றூ ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து நோட்புக்கில் அதற்கு ஸ்வரக் குறிப்பு எழுதிவிடுவேன்.

ரிக்கார்டிங்கில் ஸ்வரம் சொல்லும்போது, ‘கா’வை ‘மா’ என்றும் ‘மா’வை ‘பா’ என்றும் மாற்றிச் சொல்லிவிடுவேன். ஆர்கெஸ்ட்ரா என்னைக் கிண்டல் செய்து சிரிக்க.. நரகவேதனையாக இருக்கும். இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, பின் அவர்களே என்னைக்கண்டு ஆச்சரியப்பட்டனர்.

இசையமைப்பாளனாக ஆனபின் நான் கொடுக்கும் ஸ்வரங்களை வாசிக்க முடியாமல் திணற என்று என்னென்னவோ நடந்துவிட்டது. இன்றும் {இந்த வார்த்தை பயன் படுத்தியதால் எச்சரிக்கப் படுகிறீர்கள்}ங்காக எழுதிக்கொடுக்கும் இசையை அப்படியே வாசித்துக்காட்டும் திறமைமிக்க இசைக்கலைஞர்கள் ஓரிரண்டுபேர்தான் இருக்கிறார்கள். ஏதோ கம்ப்யூட்டர் வந்ததோ.. திரையிசை தப்பித்தது.

செய்யும் தொழில் செய்கின்றவனின் திறமையை மேம்படுத்தவேண்டும். அவன் வாழ்க்கையை மட்டும் மேம்படுத்தினால் அது வயிற்றுப்பிழைப்பு!"

நன்றி : ஆனந்த விகடன்: 19.9.1999

தகவல் நன்றி: திரு. ஜெகதீஷ் ஜெயராமன்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!