கடவுளும் நானும்!


ANTHAPPAARVAI

கடவுளும் நானும்! Kadavul
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

ஒரு நாள் இரவில் நான் கடவுளை சந்தித்தேன்! நீண்ட நாட்கள் நாங்க‌ள் இருவரும் (சி)சந்தித்து உரையாடினோம். பல சந்தேகங்க‌ளை கேட்டேன் அனைத்திற்கும் கடவுளிடமிருந்து தெளிவான(?) பதில் கிடைத்தது. அந்த உரையாடல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்...

என்னிடம் வந்த கடவுள், வேல் கம்புகளுடனோ..., பலத்த இடியோசையுடனோ... அல்லது மின்னல் ஒளியிலோ எனக்குக் காட்சி தரவில்லை! வெறும் குரலை மட்டுமே என்னால் உணர முடிந்தது.

ஜாதி, மதங்களைக் கடந்து... தனிப்பட்ட நிலையில் இருந்து, பொதுவான கருத்துக்களோடு, மாறுபட்ட கோணத்தில் அமர்ந்து இவற்றைப் புரிந்து கொள்ள‌ முயற்சி செய்யுங்கள்! இந்த உரையாடல் கட்டுரையின் நோக்கம், கடவுள் உண்டா? இல்லையா? என்பதைப் பற்றியதில்லை! கடவுள் என்றால் என்ன? என்பதைப் பற்றிய எனது மாறுபட்ட சிந்தனை மட்டுமே!!

இதில் கேட்கப்படும் கேள்விகள் எல்லாம் அனைத்து மக்களுக்குள்ளும் எழும் கேள்விகள் தான். ஆனால், இதில் சொல்லப்படும் பதில்களில் யாருக்கேனும் உடன்பாடு இல்லையென்றால், அந்தக் கேள்விக்கான பதிலை உங்களுடைய பார்வையிலிருந்து தெளிவு படுத்தலாம். அவ்வாறு தெளிவு படுத்தினால் கண்டிப்பாக நான் ஏற்றுக் கொள்வேன். மனிதன் கால‌ம் காலமாக மற்றவர்கள் சொல்வதையும், மற்றவர்கள் சொல்லி வைத்ததையுமே பின் பற்றி நடக்கின்றான். ஒருவர் சொல்லும் கருத்துக்கள் நம்மை மேலும் சிந்திக்க விடாமல் நம்மைக் கட்டிப் போடுமேயானால்... அதுவரை அது தான் நமக்கெல்லாம் வேதம்!

உதாரணமாக, உலகம் தட்டையானது என்று நம்பிக்கொண்டிருந்த மனிதன் தான் பின்பு உலகம் உருண்டை என்பதையும் சொல்லிக் கொண்டு திரிந்தான். ஆனால் இன்று அதே உலகம் உருண்டையும் அல்ல தட்டையும் அல்ல ஆப்பிள் வடிவத்தில் இருக்கிறது என்பதையும் நாம் ஏற்றுக் கொண்டு தான் இருக்கின்றோம்! ஒருவேளை, மக்கள் தொகை பெருக்கத்தால் மனிதன் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறான் அல்லவா? அதனால், இதே உலகம் நாளை வாழைப்பழத்தை போல நீண்டாலும் நீளலாம்!! Question

என்ன செய்வது உலகம் நாடக மேடை அல்லவா? அதனால், நாடகத்தில் நடிக்கும் நடிகனைத் தான் மக்கள் உடனே அறிந்து கொள்கின்றனர். ஆனால் அந்த நாடகத்தை எழுதி, இயக்கி, அரங்கேற்றம் செய்யும் படைப்பாளனை கால தாமதமாகத் தான் புரிந்து கொண்டார்கள். அதைப் போல இந்த உலகத்தை படைத்து ஆட்டுவிக்கும் "கடவுள்" என்று சொல்லப்படும் "சக்தி"யையும் மனிதன் கால தாமதமாகத் தான் புரிந்து கொள்வான் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அவன் எப்போது வேண்டுமானாலும் புரிந்து கொள்ளட்டும். அல்லது புரிந்து கொள்ளாமலே கூடப் போகட்டும். அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை! ஆனால், இந்தத் தள‌த்தைத் தொடங்கியதற்கு நாமும் எதையாவது சொந்தமாக சிந்தித்து எழுதி வைப்போம்.

கடவுள் உண்டு என்பதற்காக அதை வழிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்றால், நமக்கு சிந்திக்கும் திற‌ன் இருக்கிறதே...? நாமும் சிந்தித்துக் கொண்டே இருப்போம்!! சிந்திக்கத் தெரிந்த யாரும் இதை தவறு என்று சொல்ல மாட்டார்கள் என்றே நினைக்கின்றேன்.

ஒருவேளை... யாராவது தவறு என்று சொல்லி விட்டால்...?

குரல்: "கண்டிப்பாக யாரும் அவ்வாறு சொல்ல மாட்டார்கள் தம்பீ!..."

நான்: ஆங்... யாருப்பா அது?

குரல்: " என்னையா யார் என்று கேட்கிறாய்? நான்... கடவுள்!"

தொடரும்...

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

avatar

திருக்குறளுக்கு விள‌க்கம் தெரியாதவர்கள் எல்லாம் திருவள்ளுவர் படத்தை லோகோ'வா போட்டு வச்சிருக்கும் போது, இந்த உரையாடலில் கடவுளைப் பற்றி விளக்குவது தப்பே இல்லை என்பது எனது கருத்து...



Last edited by ANTHAPPAARVAI on 7/6/2012, 9:37 am; edited 1 time in total (Reason for editing : மரியாதைக் குறைவான வார்த்தை நீக்கப் பட்டது!)

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

ANTHAPPAARVAI

உரையாடல்: பகுதி-01

குரல்: " என்னையா யார் என்று கேட்கிறாய்? நான்... கடவுள்!"

நான்: "கும்பிடுகிறேன் கடவுளே"

கடவுள்: "நீ இப்போது என்ன செய்தாய் மானிடா?"

நான்: "உங்களை வணங்கினேன் கடவுளே!"

கடவுள்: "ஒ! எதற்காக என்னை வணங்கினாய்?"

நான்: "என்னை இந்த பூமியில் படைத்ததற்கு நன்றி சொல்லும் விதமாக அவ்வாறு வணங்கினேன் கடவுளே"

கடவுள்: "அப்படியா? சரி... நான் ஏன் உன்னைப் படைத்தேன் என்று உனக்குத் தெரியுமா?"

நான்: "நான் சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்குத் தானே?"

கடவுள்: "ஆம், அதற்காகத்தான்... ஆனால், நீ படைக்கப் பட்டதன் நோக்கம் அதுமட்டுமல்ல. எனது தேவைக்காகவே நான் உன்னைப் படைத்திருகின்றேன். அதனால் நீ எனக்கு நன்றியும் சொல்ல வேண்டாம், நீ என்னை வணங்கவும் வேண்டாம்!"

நான்: "எனக்குப் புரியவில்லை கடவுளே... நான் ஏன் உங்களை வணங்கக் கூடாது?"

கடவுள்: "அதாவது... (கடவுள் சற்று யோசித்துவிட்டு...) ஆம், உனக்குப் புரியும்படி சொல்கிறேன்... அதாவது, நீங்கள் இப்போது செல்போன் பயன் படுத்துகிறீர்கள் அல்லவா? அதை உருவாக்கியது யார்?"

நான்: "என்னைப் போன்ற ஒரு மனிதன் தான் உருவாக்கினான்"

கடவுள்: "அந்த செல்போனை பயன் படுத்துவது யார்?"

நான்: "அதுவும் மனிதன் தான்"

கடவுள்: "ஆம்! சரியாகப் புரிந்து கொண்டாய் மானிடா...! அதாவது, உங்களுடைய தேவைக்காக செல்போனை உருவாக்கினீர்கள். அதை நீங்களே பயன் படுத்துகிறீர்கள். ஆனால், எந்த ஒரு செல்போனும் தானாக இன்னொரு செல்போனுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொள்வதில்லை. இதற்காக செல்போன் உங்களுக்கு நன்றி சொல்கிறதா? அப்படியே சொன்னாலும் அது உங்களுக்குப் புரிந்து விடப் போகிறதா? அது போல நான் உங்களைப் படைத்தது எனது தேவைக்காகவே... அதனால், நீங்கள் எனக்கு நன்றி சொல்ல தேவையில்லை! அப்படியே சொன்னாலும் எனக்குப் புரியப் போவதும் இல்லை. நீங்கள் என்னை வணங்குவது எனக்கு தெரியப் போவதும் இல்லை!"

நான்: "அப்படியானால்... இந்தப் பூமியில் பல கோவில்கள் கட்டி வழிபாடுகள் எல்லாம் நடக்கிறதே?...

கடவுள்: "என்னது கோவிலா?.... வழிபாடா?... அப்படியென்றால்?!?!"


தொடரும்...

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

ANTHAPPAARVAI

உரையாடல்: பகுதி-02

கடவுள்: என்னது... கோவிலா? வழிபாடா?... அப்படியென்றால்?....

நான்: என்ன கடவுளே.... இது உங்களுக்கு தெரியாதா? இந்த உலகில் எத்தன எத்தனை உயரமான கோபுரங்களுடன் உங்களுக்காக கோவில்கள் கட்டப் பட்டிருக்கிறது...

கடவுள்: இல்லை மானிடா, நீ தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்! அந்தக் கோபுரங்கள் எனக்காக கட்டப் பட்டதில்லை. அதெல்லாம் இறந்து போன அவரவர் உறவினர்களுக்காக கட்டப் பட்டவை!

நான்: இல்லையே, அங்கு அவர்களுடைய உறவினர்களின் புகைப்படங்கள் மாட்டப் படவில்லை, மாறாக உங்கள் படங்கள் தான் மாட்டப் பட்டிருக்கிறது. எனவே அது நீங்கள் தான். அந்தக் கோவில்கள் உங்களுக்கானது தான். என்னை ஏமாற்றாதீர்கள்...

கடவுள்: மானிடா!... (கோபமாக...) நீ படித்தவன்... நான் படைத்தவன்! எனக்குத் தெரியாததா உனக்குத் தெரிந்துவிடும்... உன் கண்களைத் திறந்து என்னை நன்றாகப் பார்...!

நான்: கண்ணைத் திறந்தால் "கனவு" கலைந்து விடுமே கடவுளே...?!

கடவுள்: கிண்டல் செய்யாமல், என்னை நன்றாக உற்றுப் பார்! எனது புகைப்படமா அங்கு மாட்டப் பட்டிருக்கிறது?...

நான்: (கண்களை நன்றாகத் திறந்து பார்த்தேன்...) ஒண்ணுமே தெரியலையே கடவுளே..!?

கடவுள்: பிறகு எப்படி..., அங்கு இருப்பது நான் தான் என்று அடித்துச் சொல்லுகிறாய்?...

நான்: அட ஆமா....!, அதுக்கு ஏன் நீங்க என்னை அடிக்கிறீங்க?...

கடவுள்: பிறகு.... கண்ணைத் திறந்து பாருன்னு சொன்னா, கனவு கலைஞ்சிடும்ன்னு கிண்டலா பண்ணுறே... நான் திறக்கச் சொன்னது உன்னோட பார்வையை இல்லை, உன்னோட அறிவை!!!

நான்: இப்ப புரிஞ்சிடுச்சி கடவுளே.... அடிச்சி சொன்னாத் தான் புரியும் போல இருக்கு! சரி கடவுளே.... நான் உங்ககிட்ட கேட்கனும்ன்னே இருந்தேன். ஆமா... எதுக்காக எல்லாத்துக்குமே எதிர்ப்பதமா ஒண்ணை படைச்சிருக்கீங்க?

கடவுள்: எதிர்ப்பதம்-ன்னா?... எனக்குப் புரியிர மாதரி கேளு குயிலன்!

நான்: (Mind Voice) ம்கும்.... நான் பேசுறது மனுசங்களுக்குத்தான் புரியாதுன்னு நினைச்சேன்... உங்களுக்குமா புரியல?...

கடவுள்: உன்னோட Mind Voice எனக்குப் கேக்குது குயிலன்....

நான்: ஆம்! இதெல்லாம் கரைக்டா கேக்கும்... ஆனா, நான் சொல்லுறது மட்டும் புரியாதா?...

கடவுள்: எல்லாம் காரணமாத்தான் கேக்குறேன்... நீ சொல்லு..!

நான்: அதாவது... இப்போ, நல்லதுன்னு ஒண்ணு இருந்தா அதுக்கு நேர் மாறா கெட்டதுன்னு ஒண்ணு இருக்கு! இன்பம்ன்னு இருந்தா, துன்பம்ன்னு ஒண்ணு இருக்கு!
பகல்ன்னு இருந்தா.....

கடவுள்: (குறுக்கிட்டு..) கொஞ்சம் இரு மானிடா! நீ எதை நல்லதுன்னு சொல்லுறே? எதை கெட்டதுன்னு சொல்லுறே? முதல்ல... எது நல்லது? எது கெட்டது? அப்படின்னு நான் உனக்கு எப்ப சொல்லிக் கொடுத்தேன்?

நான்: ஆஹா.....! இதுல இப்படி ஒண்ணு இருக்கா?... (உடனே சமாளித்து....) ம்‌ம்.... நல்லா இருக்கு கடவுளே நீங்க சொல்லுறது... எல்லாத்தையும் உங்ககிட்டயே கேட்டுக்கிட்டு இருக்க முடியுமா? நீங்க எங்க இருக்கீங்கன்னு யாருக்குத் தெரியும்?... நான் மனுசங்க கூடத் தான் பேசுறேன், பழகுறேன், வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்... அப்போ மனுசங்க சொல்லுறதைத் தானே நான் நம்ப முடியும்?...

கடவுள்: உன்னோட பேச்சுத் திறமையால நீ என்னை மடக்கிட்டதா நினைச்சுக்காதே மானிடா...! மத்தவன் சொல்லுறதை அப்படியே நம்புறதுக்காகவா, நான் உனக்கு ஆறாவது அறிவைக் கொடுத்தேன்? நீ யாறுக்கிட்டா பேசி கிட்டு இருக்கேன்னு உனக்கு நியாபகம் இருக்கா?!

நான்: ஆ..ங்...! நான் ஒண்ணும் தப்பா கேக்கலையே... சரியாத்தானே சிந்திச்சி கேட்டுருக்கேன்?...

கடவுள்: ஆமா மானிடா, நீ சரியாத்தான் சிந்திச்சி கேட்டுருக்கே...! நீ கேட்டதிலேயோ, சிந்திச்சதிலேயோ எந்தத் தவறும் இல்லை. ஆனா, நான் உனக்கு ஆறாவது அறிவைக் கொடுத்தேன் பாரு... அதிலே தான் தவறு இருக்கு! ஆறாவது அறிவை நீ எப்படி பயன்படுத்திக் கிட்டு இருக்கேன்னு நினைக்கும் போது.... ஏண்டா, நாய்களுக்கும், கழுதைகளுக்கும் அந்த அறிவை கொடுக்காமல் போனேன்னு நினைச்சி, நான் ரொம்ப வேதனைப் படுறேன்.....

நான்: மன்னிச்சிடுங்க கடவுளே!....

கடவுள்: இல்லை மானிடா..., நீ உன்னோட ஆறாவது அறிவை பயன்படுத்தி, எப்படி வேனாலும் பேசலாம்! எதை, ஏதோட வேணும்னாலும் முடிச்சு போடலாம், உண்மையை பொய்'ன்னு சொல்லலாம்... பொய்'யை உண்மை'ன்னு சொல்லலாம்... எல்லாத்துக்கும் உதாரணம் காட்டி நிரூபிக்கலாம். ஆனால், அதனால என்ன பயன்....? அங்க தான் இருக்கு இந்த ஆறாவது அறிவோட வெற்றி! அதை நான் மனிதனுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறேன்...!

நான்: கடவுளே... கேக்குறேனேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க... மற்ற உயிரினங்களுக்கு, நீங்க ஏன் சிந்திக்கிற அறிவை கொடுக்க வில்லை?

கடவுள்: மற்ற உயிரினங்கள் சிந்திக்க வில்லை என்று யார் சொன்னது மானிடா..? இந்த வீடியோவை கொஞ்சம் பார்!
"
Spoiler:

கடவுள்: புரிஞ்சுதா...? நான் எல்லா உயிரினங்களுக்கும் சிந்திக்கிற அறிவைக் கொடுத்திருக்கிறேன்.... ஆனால், மனிதனுக்கு மட்டுமே "சிந்தித்து செயல்படுத்தக் கூடிய" அறிவைக் கொடுத்தேன். அது தான் ஆறாவது அறிவு!!! இதை மனிதனுக்கு கொஞ்சம் அதிகமாவே கொடுத்தேன். நான் ஏன் உன்னை மாதரி மனிதனுக்கு மட்டும் இந்த ஆறாவது அறிவைக் கொடுத்தேன் தெரியுமா? மற்ற உயிரினங்கள் எல்லாம், சாப்பிடும்... தூங்கும்... இனப்பெருக்கம் செய்யும்! ஆனா, மனிதன் மட்டும் தான் புதுசு புதுசா எதையாவது உருவாக்குவான்!.... மனிதன் மட்டும் தான் மற்ற உயிரினங்களை அரவணைக்கிறான்!... அதனால தான் மனிதனுக்கு ஆறாவது அறிவைக் கொடுத்தேன்.

நான்: நான் எனது தவறை உணர்ந்து கொண்டேன் கடவுளே...

கடவுள்: தவறைக் கூட உணர வேண்டாம் மானிடா, உன்னை நீ உணர்ந்தால் போதும்! உன் வாழ்க்கையை சரியாக வாழ்ந்து, உன்னால் முடிந்ததை இந்த உலக மக்களுக்கு உணர்த்து! அதற்காக என்னைப் பற்றி பெருமை பேசிக் கொண்டிருக்காதே...

நான்: சரி கடவுளே... ஆனால், எங்கள் திருப்திக்காக, நாங்கள் உங்களுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து கொள்கிறோமே... அதில் என்ன தவறிருக்கிறது?

கடவுள்: உன்னை உருவாக்கியவன் நான்... நான் தான் உனக்காகக் கவலைப் பட வேண்டும். நீ பெருமை பேசியோ, நீ அர்ச்சனை செய்வதாலோ நான் உயர்வடையப் போவதில்லை. நான் உயரத்தில் தான் இருக்கிறேன். நீ உயரத்திற்கு வா! உன்னை நீ சுத்தப்படுத்திக் கொள்!! நீ எனக்கு பாலாபிஷேகம் செய்வது எப்படி தெரியுமா இருக்கிறது? உன் பெற்றோரை சாவடித்து சாமாதி செய்து, அதுதான் என் பெற்றோர் என்று சமாதிக்கு பாலாபிஷேகம் செய்வது போல் உள்ளது!! உன்னை வடிவமைத்தவன் நான். எனவே நீ என்னை சாதாரணமாக அடையாளப் படுத்தாதே!! கடவுள் இல்லை என்று சொன்னால் உனக்கு எவ்வளவு ஆத்திரம் வருகிறது? உறவு, நட்பு என்று கூட பார்க்காமல் எத்தனை எடுத்தெறிந்து பேசுகிறாய்.... அப்படி இருக்கும் போது, நான் மகா சக்தி...! நான் பேரொளி...! நான் அண்டங்களை எல்லாம் ஆட்டுவிக்கும் அதிகாரத்தில் இருக்கிறேன்.... என்னை ஒரு சிறிய கல்லோடு ஒப்பிட்டுப் பார்க்கிறாயே?... வாழைப் பழத்திற்கும், தேங்காய்க்கும் நான் பிச்சை எடுப்பது போல் என்னை கேவலப் படுத்துகிறாயே?... அதைப் பார்த்து நான் எவ்வளவு ஆத்திரப் பட வேண்டும்? எவ்வளவு கொந்தளிப்பு அடைய வேண்டும்?... பூகம்பங்களையும், சுனாமிகளையும் ஒரே நேரத்தில் உருவாக்கச் செய்துவிடாதே!! எனது பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கிறது... அந்த எல்லைவரை மட்டுமே உங்களுக்கு அனுமதி....!! எல்லையைத் தாண்ட முயற்சித்தால் பூமியையே இரண்டாகப் பிளந்தெரிந்து விடுவேன்!! அதனால் யாருக்கு என்ன விளைவு என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்!!

நான்: கடவுளே!... அமைதி!... அமைதி..! சாந்தமாகுங்கள்!... எனது அறியாமையினால், உங்கள் கோபத்தை நான் தூண்டி விட்டேன்... இருங்கள்.. இருங்கள்... விபூதி, தேங்காய், பழம், கற்பூரம் கொண்டு வந்து உங்களை சாந்தப் படுத்துகிறேன்...!

கடவுள்: அடே... முட்டாள்!! நான் இதுவரை என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் என்று உனக்குப் புரிய வில்லையா?... மீண்டும் மீண்டும் அதையே செய்வேன் என்கிறாய்...?

நான்: ஐயோ...! கடவுளே....! மன்னித்து விடுங்கள்... மன்னித்து விடுங்கள்...! எனக்குத் தூக்கக் கலக்கமாக உள்ளது... அதனால் தான் இந்தத் தடுமாற்றம் என்று நினைக்கிறேன்... சரி கடவுளே... நாம் ஆரம்பத்தில் பேசியது போல் சாதாரணமாக பேசலாமா?

கடவுள்: தூங்கி வழியும் உன்னோடு நான் பேசத்தயாராக இல்லை!! நான் செல்கிறேன்...!

நான்: என்ன கடவுளே, அதற்குள் கோபித்துக் கொண்டீர்கள்!

கடவுள்: அதெல்லாம் நான் ஒன்றும் கோபம் கொள்ள வில்லை! என் கோபத்தைக் காட்டினால் நீ தாங்கமாட்டாய்! சரி... நீ நன்றாக தூங்கு, நாம் இன்னொரு நாள் பேசலாம்..!

நான்: ஆம்! சரி கடவுளே... எனக்கும் கொஞ்சம் கண்களை வாட்டத் தான் செய்கிறது... இந்த நிலையில் உங்களோடு பேசினால், நீங்கள் பார்த்திபன் போல் குண்டக்க மண்டக்க எதையாவது சொல்லி, என்னை ஆஃப் பண்ணி விடுவீர்கள். எனவே நானும் நன்றாகத் தூங்கி தெளிவாக வருகிறேன்... உங்களிடம் நிறைய பேசவேண்டும். உங்களால் படைக்கப் பட்ட நான் எத்தனை திறமையாகப் பேசுகிறேன் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?...

கடவுள்: அடக்குடா...! நான் உன்னைப் படைத்தவன்.!

நான்: (Mind Voice) அதைத் தானே நானும் சொன்னேன்... ஏன் அடக்கச் சொல்கிறார் இந்தக் கடவுள்..?

கடவுள்: ம்‌ம்....!

நான்: ஆங்! ஒன்றுமில்லை கடவுளே... நாம் நாளை பேசுவோம்... குட் நைட் !

கடவுள்: அது என்ன குட்டு... நைட்டு...?

நான்: எல்லாம் தெரியும்ன்னு சொல்ல வேண்டியது... அப்பறம் அது என்ன? இது என்ன? ன்னு என் வாயைப் புடுங்க வேண்டியது... அதாவது ராத்திரியில, தூங்கப் போகும் போது இப்படி சொல்லிக்கறது எங்களை மாதரி மனிதர்களோட வழக்கம். அதைத்தான் சொன்னேன்...

கடவுள்: அப்படியா? எனக்கு ராத்திரியும் இல்லை, பகலும் இல்லை. நீ தூ...ங்கு...! (என்று கூறி கடவுள் சென்று விடுகிறார்..)

நான்: ஆமா... நான் இதுவரைக்கும் கடவுளோடவா பேசிக்கிட்டு இருந்தேன்...? கடவுள் மனிதர்களோடு பேசுவாரா? ஒருவேளை... எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்குமோ...? இல்லைன்னா... நான்தான் கடவுளா இருப்பேனோ...? ஐயோ! கடவுள்ன்னு சொன்னா அப்புறம் புடிச்சி அரஸ்ட் பண்ணி உள்ள போட்டுடப் போறாங்க.... "எல்லாரும் கேட்டுக் கோங்க.... நான் கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள் இல்லை...!!" ஐயோ! என்ன இது கடவுள் இல்லைங்கர மாதரி வருது.... அய்யய்யோ.. வம்பே வேண்டாம், "ஐயா, எல்லோரும் நல்லா கேட்டுக்கோங்க... நான்... என்னைப் பார்த்து... நான் கடவுள் இல்லைன்னு... என்னையே நான் சொல்லிக்கிட்டேன்...!!"
அப்பா.......டா.....!!

கடவுள் குரல்: தூங்குடா டேய்!...

தொடரும்...

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

ANTHAPPAARVAI

உரையாடல்: பகுதி-03


நான்: "என்ன கடவுளே... எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?"

கடவுள்: (கடவுள் சிரிக்கின்றார்)

நான்: "என்ன கடவுளே சிரிக்கிறீங்க...?"

கடவுள்: "பின்னே சிரிக்காம என்ன பண்ண சொல்லுறே... எல்லாரும் என்கிட்ட வந்து, 'அவன் நல்லா இருக்கணும்.., அவன் குடும்பத்தை நல்லா வச்சிக்கணும்னு' தான் கேட்டிருக்கிறார்கள். ஆனா நீ, என்னை நல்லா இருக்குறீங்களா ன்னு கேக்குறியே...? அதான் சிரிச்சேன்."

நான்: "என்ன சொல்லுறீங்க கடவுளே...? மக்கள் எல்லாம் உங்க கிட்ட வந்து அப்படி கேட்டாங்களா..? புரியலையே!..."

கடவுள்: "என்ன புரியலை உனக்கு? நீ கோவிலுக்கு போவதில்லையா... அங்க வந்து பாரு அப்பதான் உனக்குப் புரியும்!"

நான்: "கோவில்-ல போயி கேப்பாங்க-னு எனக்கு தெரியும் கடவுளே. ஆனா, உங்க கிட்ட கேட்டாங்க'ன்னு சொன்னீங்களே அது எப்படி?"

கடவுள்: "லூசாப்பா நீ?! கோவில்-ல வந்து கேட்டா அது என்கிட்ட கேட்ட மாதரி தானே."

நான்: "இல்லை கடவுளே, நீங்க தான் கோவில்-ல இருக்குறது நான் இல்லைன்னு சொன்னீங்களே.... அப்பறம் எப்படி..."

கடவுள்: (கடவுள் சற்று யோசித்தார். பின்பு சுதாரித்து... ) "நான் கோவில்-ல இல்ல தான்... ஆனா இருக்கேன்!"

நான்: "என்ன கடவுளே வடிவேலு மாதரி பேசுறீங்க?"

கடவுள்: "ஏய் லூசு...! கடவுள் எங்கும் நிறைந்தவர்-னு உனக்கு தெரியாதா? கொஞ்சம் இடம் கொடுத்தா போதுமே... உங்க கிட்ட எல்லாம், 'நான் கடவுள்' அப்படிங்கர திமிரோட நடந்திருக்கணும். சரி... போனாப் போகுது-னு இயல்பா பழகலாம் னு வந்தா என்னையே கலாய்க்கிரியா? நான் செல்கிறேன் போ!" (கோபத்தோடு கிளம்புகிறார்...)

நான்: (போனாப் போங்க, இங்க யாரும் உங்களை வெத்தலை பாக்கு வச்சி கூப்பிடலை" அப்படின்னு சொல்லலாம்-னு நினைத்தேன். ஆனால், அது அநாகரீகம் என்பதால் சொல்லவில்லை )
"என்ன கடவுளே.., ஆ ஊ னா கோவிச்சிக்கறீங்க. சந்தேகத்தைத் தானே உங்க கிட்ட கேட்டேன்?"

கடவுள்: "நல்லா சந்தேகம் கேட்டே போ! வேற நல்ல சந்தேகமே உனக்கு வராதா?"

நான்: "இருக்கு கடவுளே! ஒரு பெரிய சந்தேகம் இருக்கு! அதாவது... நீங்க ஒருத்தர் தான். ஆனா இங்கே கடவுள்-னு சொல்லி, டிசைன் டிசைனா நிறையா கடவுளுங்களை காட்டுராங்களே... இது எப்படி வந்தது? ஏன் அப்படி சொல்லுறங்க?"

கடவுள்: "நல்ல கேள்வி தம்பி! நான் ஒருத்தன் தான் ! ஆனா நிறையா உருவங்களை நீ பார்த்ததாக சொல்லுகிறாயே அதுவும் நான் தான்!"

நான்: "ம்கும்... இதுக்கு எங்க மனுசங்களே தேவலாம் போலருக்கே. அவங்களாவது கொஞ்சம் புரியிர மாதரி, நம்புற மாதரி சொன்னாங்க."

கடவுள்: "உங்க மனுசங்க என்ன சொன்னாங்க தம்பி"

நான்: "அதாவது... இப்ப நான் இருக்கேன் இல்லையா, என் மகன் வந்து என்னை 'அப்பா' அப்படின்னு கூப்பிடுவான்... என் மனைவி என்னை 'கணவன்' என்று கூப்பிடுவாள்.., மற்ற உறவுக்காரர்கள் வேறு வேறு மாதரி கூப்பிடுவார்கள்... ஆனால் நான் ஒருத்தன் தான் இல்லையா? அதே மாதரி தான் நீங்களும்!' அப்படின்னு சொல்லிக் குடுத்தாங்க கடவுளே!"

கடவுள்: " அப்படினா, உன்னோட கள்ளப் பொண்டாட்டி, உன்னை 'கள்ளப் புருசனே' அப்படின்னு கூப்பிடுவாளா...?"

நான்: "என்ன கடவுளே...? இப்படி அபத்தமா பேசுறீங்க?"

கடவுள்: "பின்னே... நீ அபத்தமான காரணம் சொன்னா, நான் மட்டும் என்ன சும்மா இருப்பேனா? விட்டா மாமன் மச்சான்-னு சொல்லி என்கிட்ட பொண்ணு கேப்பீங்க போலருக்கே! இப்போ... என்னை எப்படி கூப்புடுராங்கங்கறது உனக்குப் பிரச்சினையா? இல்லை, நான் எப்படி வெவ்வேறு உருவத்துல இருக்கேன்-கறது உனக்குப் பிரச்சினையா?"

நான்: "யோசிக்க வேண்டியா விஷயம் தான் கடவுளே...!"

கடவுள்: "நல்லா யோசி!"

நான்: "................................."

கடவுள்: "ரொம்ப யோசிக்கிரியே, "தொடரும்...." அப்படின்னு போட்டுடவா மானிடா?"

நான்: "ப்ச்!.. இருங்க கடவுளே... யோசிக்கிறேன்-ல... (யோசித்து விட்டு...) "ஆமா கடவுளே... எல்லாருமே உங்களை கடவுள்-னு தான் சொல்லுறாங்க. ஆனா, வேற வேற உருவத்தை மட்டும் வச்சிருக்குறாங்க.... ஆங்... உங்களை எப்படி வேற வேற உருவாத்துல வச்சிருக்குறாங்க? அது ஏன்-னு தான் தெரியணும் கடவுளே..."

கடவுள்: "ஆம்!... அப்படி கேளு சொல்லுறேன். அதாவது..."

நான்: கொஞ்சம் இருங்க கடவுளே!"

கடவுள்: "ஏம்பா என்னாச்சி?"

நான்: "இப்ப தான் 'தொடரும்' போடணும்!"

கடவுள்: "நீ அடங்க மாட்டேடா!"

தொடரும்...

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

ANTHAPPAARVAI

உரையாடல்: பகுதி-04


நான்: "ஆம், இப்ப சொல்லுங்க கடவுளே.."

கடவுள்: "என்ன சொல்லணும்?"

நான்: "அதான்... நீங்க எப்படி பல உருவத்துல சுத்தி கிட்டு இருக்கீங்க-னு கேட்டேன்-ல?"

கடவுள்: "என்னது... பல உருவத்துல நான் சுத்திக்கிட்டு இருக்கேனா?.. விட்டா என்னை நீ தீவிரவாதி லிஸ்ட்டு-ல சேர்த்துடுவே போலருக்கே...?"

நான்: "சரி, சரி சொல்லுங்க... நீங்களும் தீவிர வாதி மாதரி தானே..."

கடவுள்: "அடப்பாவி! ஏண்டா அப்படி சொல்லுறே...?"

நான்: "பின்னே, நீங்க தான் நேரடியா வராம, யாராவது மனித ரூபத்துல வந்து தான் உதவி செய்வீங்கலாமே... அப்ப நீங்க தீவிரவாதி மாதரி தானே...?"

கடவுள்: "உனக்கு ரொம்ப திமிரு தாண்டா."

நான்: "சரி நீங்க பேச்சை மாத்தாதீங்க... இதைப் பத்தி நான் உங்க கிட்ட அப்பரமா பேசுறேன். முதல்ல அந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க."

கடவுள்: "சரி சொல்லுறேன் கேள்!"

நான்: "கொஞ்சம் இருங்க கடவுளே..."

கடவுள்: "ஏம்பா, இப்ப தானே ஆரம்பிச்சோம், அதுக்குள்ள தொடரும் போடப் போறியா?"

நான்: "கிண்டல் பண்ணாதீங்க கடவுளே... நான் எப்பவும் உங்களோட பேசினா, அதை எழுதிக்கறது வழக்கம். அதான்... கொஞ்சம் இருங்க நோட்டை எடுத்துக்கறேன்."

கடவுள்: "எழுதுறதுக்குப் பதிலா, ஒரு டேப் வச்சி ரெக்கார்டு பண்ணிகலாமே.. இன்னும் வசதியா இருக்கும் தானே."

நான்: (Mind Voice ) "ஆமா, எழுதுறதே காலையில முழிச்சி பார்த்தா இருக்க மாட்டேங்குது... இந்த லட்சணத்துல ரெக்கார்டு வேற பண்ணனுமாம்..."

கடவுள்: (Mind Voice) "ம்‌ம்‌ம்.... மைண்ட் வாய்ஸு... பேசு! பேசு! நீ இப்படியே பேசிக் கிட்டு இரு... உன்னோட கற்பனையை எல்லாம்... யாரையாவது காப்பியடிக்க வச்சிடுறேன்!"

நான்: "எனக்கும் உங்க மைண்ட் வாய்ஸு கேக்குது கடவுளே..."

கடவுள்: "நீ தானடா பேசுறே, அப்பறம் உனக்கு கேக்காதா?"

நான்: "என்னது நானே பேசிக்கறேனா...?!"

கடவுள்: "சரி சரி.. வீணா பேசாதே விஷயத்துக்கு வருவோம்."

நான்: "சரி, சொல்லுங்க கடவுளே."

கடவுள்: "அதாவது, நான் எப்படி பல உருவத்துல இருக்கேன்னா... ம்‌ம்... உனக்கு எப்படி புரிய வைக்கிறது... ஆம்! நீ சங்க காலப் புலவர்களைப் பற்றி அறிந்திருக்கிறாயா?"

நான்: "என்னது, சங்க காலமா?... எனக்கு "டைரக்டர் சங்கர்" காலம் தான் தெரியும்...."

கடவுள்: "தேவாரம்? திருவாசகம்? இதாவது தெரியுமா?"

நான்: " ஹலோ, நாங்கல்லாம் செவ்வாய் கிரகத்துல போயி பிளாட் வாங்கிப் போட்டுகிட்டு இருக்கோம். இப்பப் போயி தேவாரம், திருவாசகம்-ன்னு.... என்ன கடவுளே இதெல்லாம்...?"

கடவுள்: "ஆமாண்டா..., இதையெல்லாம் படிக்காதீங்க. இண்டெர்நெட்-ல உக்காந்து பிரண்டு புடிச்சிக்கிட்டு இருங்க. உலகத்தைப் பத்தி தெரிஞ்சிக்கணும்-னா முதல்ல சங்க கால இலக்கியத்தை படிங்கடா.... உன் கிட்ட நான் பேச வந்ததே தப்புடா! நான் போறேன்!!.."

நான்: "ஐயோ, கடவுளே! எனக்கு தேவாரம், திருவாசகம், அப்பர் , சுந்தரர், சம்மந்தர்... எல்லாம் தெரியும் கடவுளே. நீங்க சொல்லுங்க..."

கடவுள்: "அப்பறம் ஏன் முதல்ல தெரியாதுன்னு சொன்னே...?"

நான்: "நான் சும்மா தமாசு பண்னினேன் கடவுளே.... என் கடவுள் கிட்ட நான் விளையாடாம வேற யாரு விளையாடுறது... இதுக்கெல்லாமா கோச்சிக்கறது?

கடவுள்: "ம்‌ம்... கொஞ்சம் அடக்கி வாசிடா...! என்னோட கோவம் உனக்கு தெரியும்-ல...?"

நான்: "ஓ! நல்லா தெரியுமே... பூமியையே ரெண்டா பிளந்துடுவேன்-னு சொல்லிருக்கீங்களே..."

கடவுள்: "ம்‌ம்! அது! மறந்துடாதே!! சரி, எங்க விட்டேன்...?"

நான்: "சங்கர்" காலத்துல விட்டீங்க...! தே.. சீ.. SORRY! சங்க காலம் கடவுளே, சங்க காலம்! சங்க காலம்..."

கடவுள்: (Mind Voice) "இவன் நம்மளைக் கலாய்க்கிறானா....? இல்ல வெறும் காமெடிப் பீசா... ஒண்ணுமே புரியலையே... இருடா மவனே உன்னை வச்சிக்கறேன்..!!"

நான்: "கடவுளே...!"

கடவுள்: "என்ன, என்னோட மைண்ட் வாய்ஸ் உனக்கு கேட்டுடுச்சா?"

நான்: "அது இல்ல கடவுளே... ரூட்டு மாறிப் போயிக்கிட்டு இருக்கு... நீங்க விளக்கத்தை சொல்லுங்க !"

கடவுள்: " அப்படி வா வழிக்கு,! அதாவது... சங்க காலப் புலவர்கள் எல்லாருக்கும் என் மேல ரொம்ப ஆர்வம். என்னைப் பார்க்கணும் பேசணும்னு ரொம்ப தவிச்சாங்க. அதனால ஒருமுறை அவங்க எல்லாருக்கும் நான் கனவுல காட்சிக் கொடுத்தேன். உன்னை மாதரி அவங்களும் என்னை கனவுல கண்டாங்க! நீ இப்ப எழுதுறது மாதரியே அவங்களும் தங்களோட கவிதையில என்னைப் பார்த்ததை பத்தி எழுதி வச்சாங்க... கனவுங்கறது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதரி தானே வரும்? அதனால அவங்கவங்க பார்த்ததை அப்படி அப்படியே எழுதி வச்சாங்க. அதுக்குப் பின்னாடி வந்த தலைமுறையினர், கால மாறுபாட்டின் விளைவாக எனக்கு உருவம் குடுக்க நினைச்சாங்க. அப்ப தான், இந்தப் புலவர்கள் எழுதி வச்ச கவிதைகளை முன் மாதரியா வச்சிக் கிட்டு ஓவியம் வரைய தொடங்குனாங்க. அந்தக் கவிதைப் பாடல்களில் இருந்த கற்பனை உருவத்தை தான் இப்ப நீ பல கோணத்துல பார்க்துக்கிட்டு இருக்கே! ஒவ்வொரு புலவர்களும் வெவ்வேறு மாதரி கனவு கண்டிருப்பாங்க இல்லையா? அதனால தான் நானும் உனக்கு வெவ்வேறு மாதரி தெரியிறேன். ஆனா, எனக்கு ஒரு உருவம் தான். என்ன விளக்கம் போதுமா மானிடா?.."

நான்: பேச வார்த்தைகள் இன்றி மௌனமானேன்.!

கடவுள்: "தூங்கிட்டான் போலருக்கு..... நல்ல விஷயம் சொன்னா தூங்கிருங்கடா...!!"

தொடரும்...

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

ANTHAPPAARVAI

கடவுள்: "மானிடா!... மானிடா!... எங்க போனான் இவன்?"

நான்: "வாருங்கள் கடவுளே! அவன் இவன் என்ற ஏக வசனங்கள் தேவையில்லை. நான் இங்கு தான் இருக்கிறேன்."

கடவுள்: "என்னப்பா... ரொம்ப நாளா நீ என்னைத் தேடி வரவேயில்லையே ஏன்?"

நான்: "நீங்க டூப்ளிகேட் கடவுள்னு தெரிஞ்சி போச்சி... அதான் வரல!"

கடவுள்: "என்னது நான் டூப்ளிகேட் கடவுளா? எவன் சொன்னது?"

நான்: "எங்கள் அறிவியல் விஞ்சானிகள் தான் சொன்னார்கள்!"

கடவுள்: "உங்கள் அறிவியல் விஞ்சானிகள் எதைத்தான் நம்பியிருக்கிறார்கள்? என்னை நம்புவதற்கு?"

நான்: "ஹலோ..! எங்கள் விஞ்சானிகள் ஒன்றும் சும்மா சொல்லவில்லை. பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து கூறியிருக்கிறார்கள் "ஹிக்ஸ் போஸன்" தான் கடவுள் அதன் மூலம் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று."

கடவுள்: "உங்கள் விஞ்சானிகள் தான் கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லி வந்தார்களே... பிறகு ஏன் ஹிக்ஸ் போஸன் என்பதற்கு "கடவுள் துகள்" என்று பெயர் வைத்தார்கள்? நாம் சொல்வதைத்தான் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு யார் சொன்னாலும் அதை முட்டாள் தனம் என்று சொல்வது தான் உங்கள் அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பா?"

நான்: "தெரியவில்லையே கடவுளே..."

கடவுள்: "சரி, அதுதான் கடவுள் என்றால்.... இதுவரை மக்கள் கோவில்களில் கடவுள் இருப்பதாக சொன்னார்களே அது மடத்தனம் தானே? அந்தக் கடவுளிடம் சரணாகதியடைந்தால் நம்மை காப்பாற்றுவார் என்பதும் அறியாமை தானே? என்னை வைத்து ஏன் இப்படியெல்லாம் நீங்கள் விளையாடுகிறீர்கள்?"

நான்: "நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் கடவுளே. அவர்கள் ஒன்றும் "ஹிக்ஸ் போஸன்" தான் கடவுள் என்று இறுதியாக சொல்லவில்லை. நீண்ட தேடலுக்குப் பிறகு அதை கண்டு பிடித்ததனால் அதற்கு "கடவுள் துகள்" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அவ்வளவு தான்."

கடவுள்: "ஏண்டா இப்படி சொதப்புரே?"

நான்: "நான் ஒன்றும் சொதப்பவில்லையே..."

கடவுள்: "நீ தானே, உங்கள் விஞ்சானிகள் கடவுளைக் கண்டு பிடித்து விட்டார்கள் என்றும். நான் டூப்ளிகேட் கடவுள் என்றும் கூறினாய்?"

நான்: "ஓ! அப்படி சொல்லிருக்கேனா? கொஞ்சம் இருங்கள் மேலே படிச்சிட்டு வரேன்...

கடவுள்: " படித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிட்டு அப்படியே ஓடிடலாம்னு பாக்குறியா? அதெல்லாம் நீ ஒன்னும் படிக்க வேண்டாம். இங்கே வா!"

நான்: சரி கடவுளே... நீங்க தான் உண்மையான கடவுள் என்று நான் ஒத்துக் கொள்கிறேன். ஆமா, இந்த "ஹிக்ஸ் போஸன்" என்று ஏன் பெயர் வைத்தார்கள்? இதன் பொருள் என்ன?

கடவுள்: "இதை நீ உங்கள் அறிவியல் மேதைகளிடம் தானே கேட்க வேண்டும்."

நான்: "நீங்கள் தான் எல்லாவற்றையும் அறிந்தவராயிற்றே... அதனால் தான் உங்களிடம் கேட்டேன். தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லுங்கள். அறிவியல் மேதைகளிடம் எனக்குக் கேட்கத் தெரியாதா?"

கடவுள்: "சரி கோபம் கொல்லாதே மானிடா. சொல்கிறேன் கேள்... அதாவது, சுமார் 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பெரு வெடிப்பின் காரணமாக இந்தப் பேரண்டம் உருவானது என்றும், பிறகு அந்தத் துகள்கள் ஒன்று சேர்ந்தே கோள்களும் நட்சத்திரங்களும் உருவாகின என்றும் உங்கள் விஞ்சானிகள் முடிவு செய்தனர். இதை தமது கோட்பாடுகள் மூலம் கண்டறிய முடியும் என்று கூறியவர்கள் "பீட்டர் ஹிக்ஸ்". இன்னொருவர் இந்தியரான "சத்தியேந்திர போஸ். இந்த இருவரின் பெயரின் கடைசிப் பாதிகளை இணைத்தே "ஹிக்ஸ் போஸன்" என்று பெயர் வைத்தனர்."

நான்: "நன்றி கடவுளே. ஆமா, இந்த ஆராய்ச்சிய எப்படி நடத்தினார்கள்?"

கடவுள்: "அதாவது இந்தப் பிரபஞ்சம் ஒரு பெரிய வெடிப்பின் மூலம் தான் உருவானது என்று உங்கள் விஞ்சானிகள் நம்பினார்கள் அல்லவா? எனவே அதே போன்ற ஒரு வெடிப்பை மீண்டும் நடத்திப் பார்த்தால் எஞ்சிய துகள்களையும் கண்டறிய முடியும் என்று க(தை)ருதினார்கள். அதன் அடிப்படையிலேயே இன்று கண்டறிந்துவிட்டதாகவும் அறிவித்து உங்களை திகைப்படைய செய்திருக்கின்றனர்!"

நான்: "அதாவது, நாம வீட்டுல ரூபாயை என்னும் போது அதிலருந்து ஒரு ரூபாய் கீழே விழுந்து காணாமல் போய்விட்டால்... மீண்டும் ஒரு ரூபாயை போட்டுப்பார்த்துத் தேடுவோமே அதைப் போலவா?"

கடவுள்: "நாம் தேடமாட்டோம் மானிடா! நீங்கள் தேடுவீர்கள்! என்னிடம் பேசும் போது இடம் பொருள் பார்த்துப் பேச வேண்டும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்!"

நான்: "மன்னித்து விடுங்கள் கடவுளே! ஆமா... அந்த பெரிய வெடிப்பை எப்படி உண்டாக்கினார்கள்?"

கடவுள்: "அதாவது, பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. நீளத்திற்கு ஒரு வட்டச்சுரங்க ஆய்வு நிலையத்தை அமைத்து, ஒளியின் வேகத்தில் புரோட்டான்களையும், நியூட்ரான்களையும் செலுத்தி மோதச்செய்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். இதன் மூலம் தான்...."

நான்: (குறுக்கிட்டு) "கொஞ்சம் இருங்க கடவுளே! என்ன சொன்னீங்க? திருப்பி சொல்லுங்க..."

கடவுள்: "ஏண்டா.., சொல்லும் போது தூங்கிட்டியா?"

நான்: "இல்லை கடவுளே. நீங்க திரும்ப சொல்லுங்க...."

கடவுள்: "அதாவது பூமிக்கு அடியில புரோட்டான்களையும், நியூட்ரான்களையும் மோதச்செய்து கண்டறிந்தனர்."

நான்: "பூமிக்கு அடியில மோதச் செய்தார்கள் என்றால்.... நிலநடுக்கம், பூமி அதிர்ச்சி வருவதற்கு இந்த அந்த மாதரி சண்டைக் காட்சி தான் காரணமா?"

கடவுள்: "நீ மட்டும் ஏண்டா இப்படி எல்லாம் யோசிக்கறே?"

நான்: "இல்லை கடவுளே.. இந்த கடவுள் துகள் கண்டு பிடிச்சதா சொன்னதற்கு முன்பு தான் சென்னையிலயும் மற்ற சில பகுதிகள்லயும் நிலநடுக்கம் ஏற்பட்டது?!?!
அப்படின்னா, அதற்கு இந்த "பைட் சீன்" தானே காரணமா இருக்க முடியும்?"

கடவுள்: "இருக்கலாம் மானிடா!"

நான்: "ஓ! அதனாலதான், 2012 முடிவுல உலகம் பேரழிவை சந்திக்கும்னு சொல்லிக்கிட்டு திரியிராங்களா? அப்ப, அந்த நேரத்துல இன்னொரு சண்டைக்காட்சி இருக்கு!"

கடவுள்: .................

நான்: "அதற்காகத்தான் செவ்வாய் கிரகத்துல இடம் வாங்கிப் போட எல்லாரும் "கியூரியா சிட்டி"க்கு போயிருக்காங்களா? பூமிய ஒடச்சிப் போட்டுட்டு மேல போயி உக்காந்துக்கலாம்-னு ஐடியா! ம்ம்... இருக்கட்டும்! இருக்கட்டும்! ஆமா, அந்தத் துகளைக் கண்டு பிடிச்சி இவங்க என்ன பண்ணப் போறாங்க?"

கடவுள்: "அங்கேயும் மனிதர்கள் வாழ முடியுமா? என்று ஆராய்ச்சி பண்ணத்தான்!"

நான்: "அங்க போயி வாழ்ந்துட்டா மட்டும்...? ம்கும்! பூமியிலேயே மனிதனுக்கு ஒழுங்கா வாழத் தெரியல. இந்த லட்சணத்துல அட்ரஸ் தெரியாத இடத்தில எல்லாம் வாழனும்னு ஆசைப்படுறான்."

கடவுள்: "மிகவும் சரியான சிந்தனை மானிடா!"

நான்: "என்ன சரியான சிந்தனை? எல்லாத்துக்கும் நீங்க தானே கடவுளே காரணம்!? இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்... இந்த உலகத்துல எதையுமே மனுசனுக்குப் புரியிற மாதரி நீங்க படைக்கவில்லையே ஏன் கடவுளே?"

கடவுள்: "ஆமா, இந்த "அந்தப்பார்வை"யோட அட்மின் பாஸ்வேர்டு எனக்கு தெரியலையே... அதை நீ ஏன் யாருக்கும் காட்டாம வச்சிருக்கே மானிடா?"

நான்: "ஹலோ! இது என்னோட பயன்பாட்டுக்கு! இதை ஏன் மத்தவங்களுக்கு சொல்லணும்?"

கடவுள்: "இந்த பிரபஞ்சமும் என்னோட பயன்பாட்டுக்குத் தாண்டா! இதை நீங்க தெரிஞ்சிக்கணும்னு ஆசைப்பட்டால்... கதம்! கதம்!..... ஹா! ஹா! ஹா!"

நான்: "மாப்பு... கடவுள் வைக்கப் போறாருடா ஆப்பு!"

தொடரும்!

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

ANTHAPPAARVAI

உரையாடல்: பகுதி-05

நான்: என்ன கடவுளே... எப்படியிருக்கீங்க?

கடவுள்: யாருப்பா அது?

நான்: நான் தான் கடவுளே...

கடவுள்: வாப்பா! அங்க, இங்க சுத்திட்டு கடைசியா என் தலைய உருட்ட வந்துட்டியா? வா!

நான்: என்ன கடவுளே... நானே என்னோட சோகத்தை எல்லாம் சொல்லி ஆறுதல் கேட்கலாம்னு வந்தா. நீங்க இப்படி கலாய்க்கிறீங்க?

கடவுள்: என்ன பிரச்சினை உனக்கு இப்போ?

நான்: கடவுளே... முதல்ல நீங்க இப்படி கலாசலா பேசாம, கடவுள் பேசுறா மாதரி பேசுங்க!

கடவுள்: என்னது கடவுள் பேசுறா மாதரியா? இதுக்கு முன்னாடி நீ கடவுள் கிட்ட பேசியிருக்கியா?

நான்: கடவுளே! நீங்க இப்படியெல்லாம் பேசினா நான் போயிடுவேன்!

கடவுள்: தம்பி... தம்பி... இங்க வாப்பா! என்ன இன்னைக்கு ரொம்ப சூடா இருக்கே? எப்பவும் நான் தான் இப்படி போறேன் போறேன்னு சொல்லுவேன். இன்னைக்கு நீ சொல்லிட்டு இருக்கே?

நான்: பின்ன என்ன கடவுளே? உங்களால நான் எத்தனை நண்பர்களைத் தான் இழக்கிறது?

கடவுள்: ஏம்பா? நீதானே எல்லாப் பதிவையும் தொடங்கினே? என்னை ஏன் குறை சொல்லிட்டு இருக்கே? இதை ஆரம்பிக்கும் போதே உனக்கு இது தெரியாதா?

நான்: ஆனா நீங்க தானே இப்படியெல்லாம் பேசுறா மாதரி என்னைப் படைச்சி விட்டீங்க?

கடவுள்: ஆஹா...! நான் ஆரம்பத்திலேயே சொல்லல... அங்க சுத்தி, இங்க சுத்தி என் தலையை தான் உருட்டுவேன்னு... கரைக்டா செஞ்சிட்டே பாத்தியா?

நான்: அப்படின்னா நீங்க என்னைப் படைக்கலையா?

கடவுள்: சரி... சரி... நான் தான் உன்னைப் படைச்சேன்... நான் தான் உன்னைப் பேசச்சொன்னேன்... நான் இல்லாம அணுவும் அசையாது... அதுக்கு என்ன இப்போ?

நான்: ஒன்னும் இல்லை கடவுளே! நான் உங்களோட பேசுறதை இதோட முடிச்சுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்...

கடவுள்: இப்போ என்ன நட்டமாகிடுச்சி? தொடரும்'னு போடுறதுக்குப் பதிலா முற்றும்'னு போட்டுட்டுப் போயிகிட்டே இரு. அவ்வளவு தானே!

நான்: அப்படின்னா இந்த தேசத்துக்கு புதுசு, புதுசா கருத்துக்களை எல்லாம் யாரு சொல்லுறது?

கடவுள்: ஏய்!... ஏய்!... நீ இப்படியே பேசிக்கிட்டு இருந்தேன்னா உன்னைக் கடிச்சே துப்பிப்புடுவேன்! உன்னைக் கொலை பண்ணிட்டு கொலை வெறி! கொலை வெறி!-னு ஆட ஆரம்பிச்சுடுவேன்! ஆயுதத்தால் தான் உனக்கு சாவுன்னு இருக்கு. ஜாக்கிரதையா இருந்துக்கோ!

நான்: கடவுளே தயவு செய்து அப்படி ஆடிடாதீங்க! ஏற்கெனவே நீங்க பூமியை இரண்டாகப் பிளந்து விடுவேன்னு சொன்னீங்க, சில நாட்களுக்கு முன்னால், அதை ஒரு தொலைக்காச்சியில் ஒரு சித்தரும் சொல்லிக் கொண்டிருந்தார்! எனவே நீங்கள் எதையும் இனிமேல் வெளிப்படையாக கூறாதீர்கள்! உங்களை எல்லோரும் காப்பியடித்துக் கொண்டிருக்கிறார்கள்!!

கடவுள்: கண்டிப்பாக ஒருநாள் நான் இந்தப் பூமியில் வந்து நிற்கப் போகிறேனா இல்லையா என்று பொறுத்திருந்து பார்!! சரி உன் பிரச்சினை என்ன அதை சொல்லு?

நான்: இல்லை கடவுளே... நான் என்ன சொல்றேன்னா?.. என்னோட கருத்துக்களையும் நான் சொல்லணும்... அதே நேரத்தில நண்பர்களையும் பகைச்சுக்கக் கூடாது! அதுக்கு ஏதாவது ஐடியா இருக்கா?

கடவுள்: இப்ப நீ என்ன பெருசா கருத்து சொல்லிட்டே'னு அதுக்கு ஐடியா கேட்டுகிட்டு இருக்கே?

நான்: ஏதோ!... சொல்றேன்ல...

கடவுள்: அதாவது தம்பி! நீ கேட்பதெல்லாம் ஒரு நாளும் நடக்காது! நீ தான் யாரோடும் ஒத்துப் போகமாட்டேன் என்கிறாயே.. பிறகு எப்படி உனக்கு நண்பர்கள் கிடைப்பார்கள்?

நான்: ஏன் அப்படி சொல்கிறீர்கள்? நான் ஒன்றும் அப்படி இல்லையே...

கடவுள்: சரி எதையாவது சொல்லித் தொலைச்சுட்டுப் போ... ஆனா நான் ஒரு ஐடியா சொல்லுறேன் கேளு! அதாவது நண்பர்கள் யாரையும் நீ பகைச்சுக்க வேண்டாம்னா... யாருக்கும் தெரியாத கருத்துக்களையெல்லாம் சொல்ல முயற்சிக்காதே! அதை சில காலங்களுக்குப் பிறகு அவர்களே புரிந்து கொள்வார்கள். பேசாம உன்னோட "தாலாட்ட வருவாளா?" வை தொடங்கு! அப்பறம்... இன்னொன்னு என்னது?...ம்ம்ம்ம்..... ஆ..ம்... "சின்ன சின்ன கவிதைகள்" அதை எடுத்துக்கோ!

நான்: அது "சின்னச் சின்ன வரிகள்"!

கடவுள்: ஆமா, அது தான்! அப்பறம்... ஏதாவது கதையை புதுசா ஆரம்பி! அப்பறம்... அந்த "கேமராவும் நானும்"னு ஒன்னு ஆரம்பிச்சிருக்கியே அதை எடுத்துக்கோயேன்? எந்தப் பிரச்சினையும் வராது!

நான்: ஓஹோ..! சினிமாக் காரங்க எல்லாம் பக்கத்துலையே நடமாடுவாங்க சீக்கிரம் போட்டுத் தள்ளட்டும்னு ஐடியா கொடுக்குறீங்களா?

கடவுள்: ஹ!...ஹா!... ஹ... ஹா!... இத பாரு தம்பீ! உனக்கு ஒன்னு தெரியுமா? என்ன தான் உன்மேல எல்லாருக்கும் வருத்தம் இருந்தாலும். அவங்க மனசுக்குள்ள நீ இருக்குறே! முதல்ல அதைப் புரிஞ்சுக்கோ!! அதனால இதையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு... பேசாம நான் சொன்னதை செய்!

நான்: அப்படியா சொல்லுறீங்க?

கடவுள்: கண்டிப்பாக!

நான்: எல்லாரு மனசுலயும் நான் இருக்கேனா?

கடவுள்: நிச்சயமாக!

நான்: அப்படின்னா உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டுக்கவா?

கடவுள்: அதானே! எங்கே திருந்தி விட்டாயோ என்றல்லவா நினைத்தேன்?

நான்: இல்லை கடவுளே கடைசியாக ஒரு கேள்வி கேட்டுக்கறேன்.

கடவுள்: சரி! கேள்! ஆமா... நான் இப்பொழுது கடவுள் பேசுவது போல பேசுகிறேனா? உனக்கு திருப்தியாக இருக்கிறதா? வருத்தம் இல்லையே?

நான்: இப்படித் தான் நீங்கள் பேசுவது வழக்கம் என்றால், எனக்கொன்றும் வருத்தம் இல்லை கடவுளே!

கடவுள்: நான் பல திரைப்படங்களில் இப்படித் தான் பேசியிருக்கிறேன்! அதற்காக நீயும் ஏன் அதை முயற்சிக்கிறாய்? நீ உன் பாணியிலேயே தொடங்கு!

நான்: OK பாஸ்!

கடவுள்: ஆனால் இது கொஞ்சம் அதிகமடா! இதனால் நீ மீண்டும் உனது நண்பர்களிடம் எதிர்ப்பை தேடிக்கொள்ளப் போகிறாய்! எச்சரிக்கிறேன்!

நான்: போங்க கடவுளே! நீங்களே என்கூட இருக்கீங்க.... அப்பறம் என்ன? நான் தான் நண்பர்கள் மனசுக்குள்ள இருக்கேன்னு சொல்லிடீங்களே... பிறகு நான் ஏன் கவலைப் படவேண்டும்?

கடவுள்: நீ திருந்தவா போகிறாய்! சரி உனது கேள்வியைக் கேள்! அதிலாவது ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா என்று பார்ப்போம்!

நான்: நான் கேட்பேன்! ஆனால் நீங்கள் ஒன்றுக்கும் உதவாத எதிர் கேள்வியை கேட்காமல் பதிலை சொல்லவேண்டும்.

கடவுள்: சரி கேள்!

நான்: அதாவது கடவுளே? ரொம்ப நாளா என்னோட மனசுக்குள்ள அரிச்சிக்கிட்டு இருக்குற கேள்வி தான் அது! இதுவரைக்கும் யாருமே இதுக்கு பதில் சொல்ல மாட்டேங்குறாங்க! இந்த உலகத்தை படைத்ததே நீங்க தானே? அப்படியானால்... எல்லோரையும் நல்லவர்களாகவே படைக்க வேண்டியது தானே? எதற்காக கெட்டவர்களைப் படைத்தீர்கள்? பிறகு எதற்காக அவர்களைத் தண்டிக்கிறீங்க? எதுக்காக திருந்தச் சொல்றீங்க?

கடவுள்: தொடரும்...

நான்: ஏன் இப்ப தொடரும்-னு போட்டீங்க?

கடவுள்: யோசிக்க வேண்டாமாடா லூசு!

நான்: அதெல்லாம் முடியாது இப்பவே சொல்லுங்க...

கடவுள்: இப்ப நீ தொடரும்னு போடலைன்னா... நான் இதோட முடிச்சி வச்சிடுவேன்...

நான்: இன்னொரு பதிவை தொடங்குவேனே...

கடவுள்: நான் முடிச்சிடுவேன்னு சொன்னது இந்தப் பதிவை இல்லை.... உன்னை!

நான்: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தொடரும்...

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

ANTHAPPAARVAI

உரையாடல் பகுதி-06

நான்: "வணக்கம் கடவுளே!"

கடவுள்: "ஆமா... உன்னால் வணக்கம் சொல்லாமல் பேச முடியாதோ?"

நான்: "பழகிப்போயிடுச்சு கடவுளே.."

கடவுள்: "மனிதர்களுக்குள் அவ்வாறு சொல்லிக் கொள்வது உங்கள் பண்பைக் காட்டுகிறது. ஆனால், அதே பண்பை என்னிடமும் கடைபிடிப்பது நியாயமா மானிடா? உங்கள் பாணியில் சொல்லப் போனால், எனக்கென்று ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் அல்லவா? மனிதர்களையும் வணங்குகிறீர்கள்... என்னையும் வணங்குகிறீர்கள்... இது எனக்குப் புரியவில்லை!"

நான்: "உங்களுக்கு இது மட்டும் தான் புரியவில்லை. ஆனால், எனக்கு வாழ்க்கையே புரியவில்லை கடவுளே..."

கடவுள்: "என்னோடு பேசிக்கொண்டிருக்கும் போதும் கூட உனக்கு எதுவும் புரியவில்லையா? சரி, வாழ்க்கையில் உனக்கு என்ன புரியவில்லை? என்னிடம் கேட்க வேண்டியது தானே?"

நான்: "முதல்ல நீங்க என்கிட்ட பேசிக்கிட்டுருக்கறதுதான் எனக்குப் புரியலை!"

கடவுள்: "நான் பேசுவது புரியாமல் தான் இத்தனை நாளும் என்னோடு உரையாடிக் கொண்டிருந்தாயா?"

நான்: "அதில்லை கடவுளே, கடவுள் என்பவர் மகத்தான சக்தி உள்ளவர் என்றும், அவர் என்னோடு பேசுவது நம்பமுடியாமல் இருக்கிறதாகவும், நாம் உரையாடுவது கடவுளுக்கும் மனிதனுக்குமான உரையாடல் போல இல்லை என்றும் பலபேர் கூறுகிறார்கள்."

கடவுள்: "என்னது? நமது உரையாடல் கடவுளுக்கும் மனிதனுக்குமான உரையாடல் போன்று இல்லையா? யார் சொன்னது அப்படி...? இதுவரை நான் யாருடன் பேசி இருக்கின்றேன்? நான் எப்படிப் பேசுவேன் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?..."

நான்: "நீங்க நல்லாத்தான் கேக்குறீங்க... அனால், பல கோடி மனிதர்கள் இந்த பூமியில் இருக்கும் போது நீங்கள் என்னைத்தேடி வந்து பேசுவதன் காரணம் என்ன? என்று எனக்கே கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருக்கின்றது..."

கடவுள்: "ஹ!... ஹா!... ஹ!... ஹா!..."

நான்: "ஏன் இந்த சிரிப்பு? இப்படியெல்லாம் சிரிக்காதீர்கள்... நீங்களும் என்னை கேலி செய்வது போல் இருக்கிறது."

கடவுள்: "இல்லை மானிடா. நான் அதற்காக சிரிக்கவில்லை. நான் உன்னோடு பேசிக் கொண்டிருப்பதற்கு சரியான காரணம் ஒன்று இருக்கிறது மானிடா!"

நான்: "அது என்ன காரணம்?"

கடவுள்: "கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டுமா?"

நான்: "ஆம்! சொல்லித்தான் ஆகவேண்டும். அதற்காகத்தானே உங்களிடம் வந்துள்ளேன்!"

கடவுள்: சரி கடைசியாக சொல்கிறேன்... உன்னிடம் வேறு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?"

நான்: "நிறைய இருக்கிறது...."

கடவுள்: "அதிலிருந்து ஒரு சிறந்த கேள்வியை உடனே கேள் பார்க்கலாம்!"

நான்: "மரணம் என்பது என்ன?"

கடவுள்: "இந்த மிகச்சிறிய நேரத்தில் எவ்வளவு பெரிய சந்தேகத்தை உன்னால் உடனடியாக கேட்க முடிகிறது என்று பார்த்தாயா? இப்படிப்பட்ட உன்னுடன் நான் உரையாடுவது நியாயம் தானே?"

நான்: "மரணம்-னா இதுதான் அர்த்தமா?... இந்தக் கேள்விதான் எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்களே...?"

கடவுள்: "ஆம்! இந்தக் கேள்வி எல்லோரும் கேட்பது தான். ஆனால் அவர்கள் எல்லோரும் அதற்கான பதிலை தேட முயற்சிக்க வில்லை என்பதையும் நீ உணரவேண்டும். கேள்வி கேட்பது ஒன்றும் பெரிய விசயமல்ல மானிடா... ஆனால், அதற்கான பதிலையும் தேடுவது தான் அறிவு! இதில் நீ ஒன்றை நன்றாகக் கவனிக்க வேண்டும்... அதாவது இது போன்ற மற்றவர்களின் உரையாடல்களில் எல்லாம் கேள்வி என்பது சொத்தையாக இருக்கும். அதற்கான பதில் மட்டுமே அவர்கள் சொல்ல நினைத்ததாக இருக்கும்.(அந்தப் பதிலும் கூட சில நேரங்களில் சொத்தையாகத்தான் இருக்கும்) ஆனால், உனது உரையாடலில் பதிலை விட கேள்விகள் தான் கடினமாக இருந்திருக்கின்றது... அந்தக் கேள்விக்கான பதிலை நீ தேடும் விதமும் புதுமையாகவே இருக்கிறது... மொத்தத்தில் உனது கேள்விகள் மற்றவரை சிந்திக்க வைக்கின்றன என்றால் அது மிகையாகாது.

நான்: "மரணம்-னா என்ன-னுதான் நான் உங்ககிட்ட கேட்டேன். அதை சொல்லாமல் நீங்கள் ஐஸ் வைப்பது எனக்கு நன்றாகப் புரிகிறது கடவுளே... ஆனால் மனிதர்கள் இந்த மரணத்தைக் கண்டு எந்த அளவிற்குப் பயப்படுகின்றார்கள் தெரியுமா?"

கடவுள்: "இல்லை மானிடா! மனிதன் மரணத்தைக் கண்டு பயப்படவில்லை. நான் தான் அவர்களுக்கு மரணத்தின் மீது ஒரு பயத்தை உண்டாக்கி வைத்திருக்கின்றேன்."

நான்: "ஏன் இந்த வில்லத்தனம்?"

கடவுள்: "ஏனென்றால்? மனிதனுக்கு மரணத்தின் மீது பயம் இல்லாமல் போய்விட்டால் எவனும் வாழ மாட்டான் மானிடா!"

நான்: "என்ன கடவுளே புதுசா ஏதோ சொல்றீங்க? மரணத்தின் மீது பயம் போய்விட்டால் மனிதன் நிம்மதியாக வாழ்வானே...?"

கடவுள்: இல்லை மானிடா... பயம் மட்டும் போகாது. வாழ்க்கையும் போய்விடும்!"

நான்: "அதைத்தானே எப்படின்னு கேக்குறேன்... இப்போதும் கூட யாரும் வாழவில்லையே... எதையோ தேடிக்கொண்டுதானே இருக்கின்றார்கள்..."

கடவுள்: "ஆம்! அவர்கள் தேடுவது, இந்த மரணத்திற்குள் தான் இருக்கின்றது!"

நான்: "என்ன கடவுளே இப்படி குழப்புறீங்க? நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை... மனிதனின் தேடலுக்கு மரணத்திற்குள் விடை இருப்பதாக கூறுகிறீர்கள். ஆனால், மரணத்தின் மீது அவனுக்கு பயத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறுகிறீர்கள்... இதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பயத்தை போக்கி இதுதாண்டா வாழ்க்கை அப்படின்னு சொல்லிட வேண்டியது தானே? அதை விட்டுட்டு இந்த விளையாட்டு எதற்காக? எனக்குப் புரியும் வகையில் தெளிவுபடுத்த முடியுமா?"

கடவுள்: "அதை சொல்லிவிட்டால் நீ கடவுளாகி விடுவாய்!... இது தேவ ரகசியம்!"

நான்: "இது ஒன்றும் தேவ ரகசியம் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் இது தேவையில்லாத ரகசியம்!

கடவுள்: "வேண்டாம் மானிடா!.. எச்சரிக்கின்றேன்!... பலருக்கு அது ஆபத்தாக முடியும்!"

நான்: "எதற்காக இப்போது நீங்கள் என்னை எச்சரிக்கிரீர்கள்? உங்கள் எச்சரிப்பில் அர்த்தமே இல்லை! காரணம் சொல்லமுடியாமல் எச்சரிப்பது அறியாமை! உங்களுடைய ரகசியம் என்பது மற்றவர்களை நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற ஒரே காரணமாகவே இருக்கின்றதே தவிர, மனித வாழ்க்கைக்கு பயன்படுவதாக இல்லை என்பது தான் உண்மை!"

கடவுள்: "நான் உனது நன்மைக்காகவும், மனிதர்கள் ஒவ்வொரு பிறவியையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவும் தான், மரணத்தின் மீது ஒரு பயத்தை உண்டாக்கியிருக்கின்றேன்..."

நான்: "ஒவ்வொரு பிறவியும் என்றால்?.... மனிதனுக்கு பல பிறவிகள் இருக்கின்றதா?... அப்போ முன் ஜென்மம், மறு ஜென்மம் என்பதெல்லாம் உண்மைதானா?"

கடவுள்: "ஆம்! உண்மைதான். நெருப்பில்லாமல் புகையாதல்லவா? மனிதனுக்கு பல பிறப்புக்கள் இருப்பது உண்மைதான். ஆனால், அவன் மீண்டும் மனிதனாகவே பிறப்பான் என்பது மட்டும் உண்மையல்ல! ஏனென்றால் ஒன்றையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருந்தால் நான் கடவுளாக இருக்க முடியாது! ஒவ்வொரு பிறவியையும் ஒவ்வொரு வகையில் வேறுபடுத்தி படைத்திருக்கின்றேன்..."

நான்: "பேசும் போது நல்லா இலக்கணத்தோட பேசுற மாதரிதான் தெரியுது. ஆனா, காரணம் கேட்டா மட்டும் சொல்ல மாட்டேங்கறீங்களே கடவுளே...?"

கடவுள்: "நான் உங்களுக்கான ஒவ்வொரு பிறப்பிலேயும் பல அற்புதமான ரகசியங்களையும் படைத்திருக்கின்றேன். அதனால தான் சொல்லுகின்றேன், எனது படைப்பின் ரகசியத்தை அறிந்து கொண்டால் நீ வாழ முடியாது! மாறாக இறந்து கொண்டே இருக்க வேண்டியது தான். அதை அனுபவிக்க வேண்டுமானால் நீ வாழத்தொடங்கு! இல்லையென்றால் இறந்து கொண்டே இருப்பாய்!..."

நான்: "எங்களைப் படைத்த உங்களையே நாங்கள் இன்று கண்டுபிடித்து விட்டோம். எங்களுக்கு மரணத்தைக் கண்டுபிடிப்பதா சிரமம்?. காலப் போக்கில் இந்த உலகத்தையே எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவோம். மழையைப் பெய்யச்சொன்னால் பெய்யும்! காற்றை நிற்கச் சொன்னால் நிற்கும்! அறிவியல் வளர்ச்சியைப் பற்றி உங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்றே நினைக்கிறேன். எனவே மரணத்தைப் பற்றி நீங்களே சொல்லிவிடுவது தான் உங்களுக்கு சிறப்பு!"

கடவுள்: "எது?... என்னைக் கண்டுபிடித்து விட்டீர்களா? எப்போது?... எப்படி கண்டுபிடித்தீர்கள்?... எங்கே, நான் எப்படி இருப்பேன் என்று கூறு பார்க்கலாம்!!! அடேய் மானிடா!... அதற்காகத்தான் "கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்" என்று மனிதனையே சொல்ல வைத்தேன். ஏனென்றால் கடவுளைக் கற்பித்தவர்களுக்கு அந்தக் கடவுளை மனிதனில் இருந்து வேறுபடுத்திக் காட்டத் தெரியவில்லை! கடவுள் தண்டிப்பார், குத்துவார், கிள்ளுவார், என்றெல்லாம் ஒண்ணாங்கிளாஸ் மாணவனைப்போலவே புலம்புகின்றனர்... சரி, வடிவம் கொடுத்தார்களே அதையாவது ஒழுங்காகச் செய்தார்களா என்றால்? அதுவும் மனிதனை போலவே... ஏனென்றால் மனிதனுக்கு கடவுளைத் தெரியாது என்பது தான் உண்மை! எனவே தான் அவனது கற்பனை என்பது அவன் பார்த்தவற்றை பின்னணியாக வைத்தே அமைந்திருக்கின்றது... அதிகப் பட்சம் பத்து தலைகளும், பல கைகளும் இருப்பதாக சொன்னதே அவனது வேறுபாடு. அதிலும் கூட தலையும் கையும் தான் வருகிறது என்பதை நீ உணர வேண்டும்.

ஆனால், எனது படைப்பில் இதுபோல எதையாவது ஒன்று போல பார்த்திருக்கின்றாயா? மனிதன் என்றால் இப்படித்தான் இருப்பான்! விலங்குகள் என்றால் இப்படித்தான் இருக்கும்! பறவை, மண், மரம், செடி, கொடி என்று ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வகையில் படைத்திருக்கின்றேன்... அந்த ஒவ்வொன்றுக்குள்ளேயும் கூட பல வேறுபாடுகளையும் புகுத்தியிருக்கின்றேன்! அப்படிப்பட்ட என்னால், 'என்னை எப்படி அடையாளப் படுத்திக் கொள்ளவேண்டும்' என்று எனக்குத் தெரியாதா? நான் உங்களிடம் வந்துதான் மேக்கப், காஸ்டியூம் எல்லாம் போட்டுக் கொள்ளவேண்டுமா? எனவே நீங்கள் வாழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், என்னையும் எனது படைப்பின் ரகசியத்தையும் அறிந்து கொள்ளாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது!"

நான்: "நன்றாக சொன்னீர்கள் கடவுளே! நன்றி.! ஆனால், அந்த மரணத்தைப் பற்றி மட்டும் சொல்லிவிடுங்களேன்..."

கடவுள்: "ஏண்டா... நீ திருந்தவே மாட்டாயா? எதை செய்யாதே என்று சொல்கிறேனோ அதையே மறுபடியும் கேட்கின்றாய்?

நான்: "என்ன பண்ணுறது? எல்லாம் உங்கள் படைப்பின் வேறுபாடுதான். நீங்கள் தானே என்னை மட்டும் இப்படி வேறுபடுத்தி படைத்து விட்டீர்கள். அதாவது கட்டுப்பாடுகளை உடைப்பவனாக...!"

கடவுள்: "இப்படி எதையாவது சொல்லி என்னை பேசவிடாமல் செய்து விடு."

நான்: "சரி கடவுளே, நீங்கள் மரணத்தைப் பற்றி சொல்ல வேண்டாம். ஆனால் ஏன் மரணத்தின் மீது மனிதனுக்கு பயத்தை ஏற்படுத்தினீர்கள்?.. அதை மட்டும் சொல்லலாம் அல்லவா?..."

கடவுள்: "அந்தப் பயம் தானடா எல்லா ரகசியத்தையும் மறைத்து வைத்திருக்கிறது... அதை எப்படி போட்டு உடைப்பது?"

நான்: வேறு வழியே இல்லை கடவுளே... நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும்! இல்லையென்றால் எதற்காக என்னிடம் உரையாட வந்தீர்கள்...? எதற்காக சந்தேகங்களை கேட்க சொன்னீர்கள்?..."

கடவுள்: "அப்படியா?... சரி சொல்கிறேன். அனால், குறுக்கே பேசாமல் கேட்டுக்கொண்டிரு. அதாவது, மரணம் என்பது மனிதர்கள் பயப்படவேண்டிய ஒரு நிகழ்வல்ல. மனிதனுக்கான புதுப்பித்தல் தான் இந்த மரணம்! ஆம்! மரணத்திற்குப் பின்னால் உனக்காக ஒரு அற்புதமான வாழ்க்கைத் தடம் காத்திருக்கின்றது!"

".................................."

"நீ உறங்கும் போது உனக்கு கனவு வருகின்றதல்லவா? அது தான் உனது அடுத்தக் கட்ட வாழ்க்கைக்கான முன்னோட்டம்...! அந்தக் கனவில் உன்னால் வண்ணங்களைக் காண முடிந்திருக்கின்றதா? முடியாது! காரணம்... அடுத்தப் பிறப்பில் உனக்கு ரத்தம் கிடையாது! ஏனென்றால் மனிதன் முதன் முதலில் தொட்டு உணர்ந்த நிறம் இந்த சிவப்புதான்!.. இந்த ரத்தம் தான்!...

"..............................."

"அதனால் தான் இந்தப் பிறவியில் நீ கொண்டிருந்த ரத்தக்கறை படிந்த உடலை இங்கேயே விட்டுச் செல்கின்றாய் என்பதை இப்போது உணர்ந்து கொள்வாய் என்று நினைக்கின்றேன். ரத்தம் இல்லையென்றால்...? அடுத்த பிறப்பில் உனக்கு உறவுகளும் இல்லை. உறவுகளால் வரும் துன்பமும் இல்லை. உறவுகள் இருந்தால் தானே துன்பமும், துயரமும் அதிகம் இருக்கும்?"

".............................."

"இந்தப் பிறவியில் நீ எப்படி இன்பங்களை தேடி அலைகின்றாயோ அதைப் போலவே அங்கு நீ துன்பங்களை தேடினாலும் உனக்குக் கிடைக்காது! அது ஒரு அற்புதமான உலகம்!"

"......................."

"அங்கே உன்னால் எதையுமே உருவாக்க முடியாது! அனுபவிக்க மட்டுமே முடியும்! ஏனென்றால் உன்னால் உருவாக்கப்படும் எதுவுமே உனக்கு துன்பத்தைத்தான் தரும்! உன்னை ஆட்டிப் படைக்கவே செய்யும்! உனது வாழ்வை சிதைக்கவே செய்யும்! எனவே நீ செய்யும் தவறுகளுக்கெல்லாம் நான் பழியாகிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காகவே அங்கு நீ எதையும் உருவாக்குவதை நான் அனுமதிக்கவில்லை!"

"............................."

"உதாரணமாக மனிதன் பணத்தை உருவாக்கினான். ஆனால், அது தான் இன்று மனிதனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது!... இது போல் மனிதனுக்காக மனிதனால் உருவாக்கப் பட்ட எல்லாமே அவனைத்தான் ஆட்சி செய்கின்றதே தவிர அவனுக்காக செயல்படுவதில்லை. உங்கள் அரசியலைப் போல!"

"................................."

"மனிதனை மனிதனே ஆட்சி செய்கின்றான் என்றால்? மற்றவற்றை நான் சொல்லியா தெரிந்து கொள்ளவேண்டும். அதனால் தான் மரணத்திற்கு அடுத்த வாழ்வில் உனக்கு இன்பங்களை மட்டுமே படைத்திருக்கின்றேன். எனவே இந்த மரணத்தைக் கண்டு நீங்கள் பயம் கொள்ளத்தேவை இல்லை! மரண பயம் என்பது உனது அழகிய வாழ்வுக்கான பாதுகாப்பு.! அதனால் மரணத்தைக் கண்டு அஞ்சாதே. அதை சந்திக்கத் தயாராக இரு! அந்த மரணத்தால் தான் நீ புதுப்பிக்கப் படுகிறாய்!..."

"..............................."

"என்ன மானிடா? புரிந்ததா? மரணத்தைக் கண்டு நீ இனிமேல் பயம் கொள்வாயா?"

நான்: "அட என்ன கடவுளே நீங்க...? நான்தான் ஏதோ தெரியாத்தனமா கேட்டுட்டேன்.... அதுக்காக இவ்வளவு பெரிய ரகசியத்தை நீங்களும் இப்படி பப்ளிக்காக சொல்லலாமா? உங்களை எல்லாம் கடவுள் என்று எப்படி ஏற்றுக் கொள்வது?"

கடவுள்: "என்னடா உளறுகிறாய்! நீ தானே என்னை சொல்லச் சொல்லி வற்புறுத்தி கேட்டாய்! இப்போது என்னையே கடவுளா என்று அலட்சியப் படுத்துகிறாய்? மனிதனிடம் கடவுள் பேசக்கூடாது என்பதை உறுதி செய்துவிட்டாயே... அறிவு இருக்கா உனக்கு?... உன்னை..."

நான்: "கொன்று விடுங்கள் கடவுளே.... என்னைக் கொன்று விடுங்கள்! அதற்காகத்தானே உங்களை அவமரியாதையாகப் பேசுகிறேன்... இப்போதே என்னைக் கொன்றுவிடுங்கள்! எனக்கு இந்த சூழ்ச்சி நிறைந்த உலகத்தில் வாழ விருப்பம் இல்லை. அந்த மரணத்திற்குப் பின்னால் இருக்கும் அழகிய உலகம்தான் எனக்கு வேண்டும். எனவே என்னைக் கொன்று விடுங்கள்!"

கடவுள்: "என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, என்னையே ஒரு நிமிடம் பதரச்செய்து விட்டாயே... நான் உன்னுடன் பேச வந்ததன் காரணம் புரிந்ததா? உனது புத்திசாலித்தனத்தை நினைத்து நான் பெருமையடைகின்றேன்!"

நான்: "ஹலோ!... ரொம்பப் பெருமை பட்டுக்கொள்ளாதீர்கள். நான் உங்களை கலாய்த்துக் கொண்டிருக்கின்றேன்.! அது புரியாமல் பெருமைப் படுராராமே...?"

கடவுள்: "என்னடா மீண்டும் உளறுகிறாய்?!..."

நான்: "பின்னே என்ன கடவுளே! இவ்வளவு பெரிய ரகசியத்தை இப்படி பப்ளிக்கா சொல்லிடீங்களே... இனிமே எல்லாரும் "செத்து செத்து விளையாடப் போறாங்களே..." அதுக்கு என்ன பண்ணப் போறீங்க?..."

கடவுள்: "காமெடி செய்தாலும் கொஞ்சம் சிந்திக்கிற மாதரி தான் செய்கிறாய். அதனால் நான் உன்மீது கோபப்படப் போவதில்லை! மனிதர்கள் எல்லாம் செத்து செத்து விளையாடுவார்களே அதற்கு என்ன செய்வது என்று தானே கேட்டாய்?... அதாவது, மனிதனுக்கு ஒரு சிறப்பு குணம் இருக்கின்றது மானிடா! என்னவென்றால்? தான் இதுவரை சந்திக்காத, கேள்விப்படாத புதிய விசயங்களை அவ்வளவு எளிதில் அவன் ஏற்றுக் கொள்வதே இல்லை! அப்படி ஏற்றுக் கொண்டுவிட்டால் அதனுள்ளேயே மூழ்கிப்போய் விடுவான்! உதாரணமாக, மனிதன் கால்நடைப் பயணம் மேற்கொண்டிருந்த போது, புதிதாக பேருந்து கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால், தனது சிந்தனை மூலம், "நடக்காமல் பயணமா? இது நம்ப முடியாது. இதனால் ஆபத்து வரலாம்" என்று கருதி அன்று அதில் ஏறிப் பயணம் செய்யவில்லை. ஆனால் இன்று எவ்வளவு ஆபத்து நேர்ந்தாலும், பேருந்தின் கூரைமீது கூட அமர்ந்து செல்லத்தயாராக இருக்கின்றான்!

கடல் வழியாகப் பயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில், ஆகாய விமானம் கண்டு பிடிக்கப்பட்டது. அப்போதும் இதே நிலைதான். ஆனால் இன்று?...

அவ்வளவு ஏன், உனது பாணியிலேயே சொல்கிறேனே... அதாவது AR.ரகுமான் முதன் முதலில் ஒரு மாறுபட்ட இசையை சினிமாவில் புகுத்திய போது, ஒட்டு மொத்த திரை உலகமும் அந்த இசையை "காட்டுமிராண்டித்தனம்" என்று விமர்சனம் செய்தது. ஆனால் அந்த இசைதான் இன்று? "ஆஸ்கர்" பெற்று உலகளவில் பேசப்படுகிறது! காரணம் முதலில் ஏற்றுக் கொள்ளாத மனிதன் இப்போது அந்த இசையில் மூழ்கி இருக்கின்றான்!

அதே போல உன் மூலம் நான் இன்று சொன்னதை, உடனே யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அப்படி ஏற்றுக்கொள்ளும் நிலை வரும் போது... நீ சொன்னது போல எல்லோரும் செத்து செத்து விளையாடுவார்கள்! அதுதான் இந்த உலகம் அழிவதற்கான நேரம்! அதுவரை இந்த உலகத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது! அப்படியானால், இந்த உலகம் எப்போது அழியும்?..."

நான்: "இது தெரியாதா? மனிதர்கள் எல்லாரும் செத்து செத்து விளையாடும் போது அழியும்!"

கடவுள்: "சரிதான், ஆனால்... எனது கருத்தை நீ இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை மானிடா!... அதாவது, மனித சமுதாயம்... இருக்கும் வாழ்வைத் தொலைத்துவிட்டு, எப்போது இன்னொரு வாழ்க்கைக்கு ஆசைப்படுகின்றதோ அப்போதுதான் இந்த உலகம் அழியும்!! இப்போது புரிந்ததா நான் ஏன் மரணத்தின் மீது பயத்தை ஏற்படுத்தி வைத்திருந்தேன் என்று? இதுபோல என்னையும், எனது ரகசியங்களையும் நீங்கள் அறிந்து கொள்ளும் போதும் உங்களுக்கு ஆபத்தே விளையும்! இதுதான் நான் மறைந்திருப்பதன் வரலாறு!

நான்: "வரலாறுன்னா, STD தானே?... நீங்கள் மறைந்திருக்கவில்லை. தலைமறைவாக இருக்கின்றீர்கள்! இவ்வளவு வேடிக்கைகளை நேரில் வந்து காட்டிக்கொண்டிருந்தால் நாங்கள் உங்களை சும்மாவா விட்டு வைப்போம்? சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி! அதுமாதறி.... எல்லாத்துக்கும் நீங்க தான் கடவுளே காரணம்!"

கடவுள்: "ஆம்! அப்படியே வைத்துக்கொள்."

நான்: "சரி கடவுளே... மனிதனுக்கு மரணத்தின் மீதான பயம் நீங்கி... உலகம் அழிஞ்சா எனக்கென்னடா.. நான் செத்ததுக்கு அப்புறம் தான் எனக்கு இன்னொரு அழகிய வாழ்க்கை இருக்கின்றதே" அப்படின்னு நினைச்சி.... என்னை மாதரி சிலர் இன்னிக்கே செத்துப் போயிட்டாங்கன்னா?..."

கடவுள்: "அதுக்காகத்தாண்ட இவ்வளவு காலமாக மரணத்தின் மீது பயத்தை ஏற்படுத்தி வைத்திருந்தேன்.... இல்லன்னா ஆசைகள் நிரம்பிய மனித சமுதாயம் எப்போதோ அழிந்து போயிருக்கும்! எந்த வாழ்வையும் அனுபவிக்க முடியாமல்."

நான்: "இதுவரைக்கும் சரி, ஆனா இப்பதான் நீங்க சொல்லிட்டீங்களே... இனிமேல அப்படி நடந்தா?... அறிவில் வளர்ச்சியில்லாத... மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்பித்திரியும் சிந்தனைத்திறன் இல்லாத யாராவது இன்னைக்கே செத்துப் போயிட்டா?..."

கடவுள்: "உன்னோடு எளிதில் பேசிக் கொண்டிருப்பதால்... நான் கடவுள் என்பதையே சில நேரங்களில் நீ மறந்து விடுகின்றாய். அதாவது ஒரு பாடத்தை முழுமையாக அல்லது சரிவர படிக்காதவர்கள் யாரும் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியாது மானிடா! மேலும், உன்னால் உருவாக்கப்படும் எதுவுமே உனக்கு ஆபத்தைத்தான் தரும் என்று சொன்னதை மறந்து விட்டாயா?...."

நான்: "அப்படியென்றால்..., வாழ்க்கையை சந்திக்க துணிவில்லாமல்..., சரிவர வாழாமல்... தற்கொலை செய்து கொள்ளும் முட்டாள்களுக்கெல்லாம் அந்த அழகிய உலகத்தில் அனுமதி கிடைக்காது என்று சொல்கிறீர்கள்... அப்படிப்பட்டவர்களுக்கு இதே துன்பங்களும், துயரங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும்!.. சரிதானே கடவுளே?..."

கடவுள்: "ஆம்! இப்போதுதான் நீ "கு யி ல ன்" என்பதை நிரூபித்திருக்கின்றாய்! அதனால்தான் கடவுளான நான் உன்னைத்தேடி உரையாட வந்திருக்கின்றேன்."

நான்: "நல்லவேளை நியாபகப் படுத்தினீர்கள்! ஆமா, என்னோடு நீங்கள் உரையாடுவதன் காரணம் என்னன்னு கொஞ்சம் தெளிவா எனக்குப் புரிகிற மாதரி சொல்ல முடியுமா?

கடவுள்: "ஏன் முடியாது? தாராளமாக சொல்ல முடியும்! தைரியமாகவும் சொல்ல முடியும்!"

நான்: "பில்டப் எல்லாம் வேண்டாம் கடவுளே... முதல்ல காரணம் என்னன்னு சொல்லுங்க?..."

கடவுள்: "கு யி ல ன்' என்றால் தேவேந்திரன் என்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதாவது தேவேந்திரன் என்றால் தேவலோகத்து அரசன்!"

நான்: "இது எங்கே சொல்லப் பட்டிருக்கின்றது? ஆதாரம் காட்ட முடியுமா?

கடவுள்: "ஆங்... உங்க வீட்டு மொட்டை மாடியில சொல்லப் பட்டிருக்கிறது... வடாம் காயப் போடப் போகும்போது படிச்சி தெரிஞ்சிக்கோ! ஏம்பா... ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை எங்க தெரிஞ்சுக்கணும்னு கூட உனக்கு தெரியாதா?

நான்: "சரி சரி தெரிஞ்சிக்கறேன்... ஆனா, எப்படியாவது என்னைக் கடவுள்-னு சொல்லி மாட்டி விட்டுடனும்... அதானே கடவுளே உங்க ஆசை...?

கடவுள்: "ஹ... ஹ... ஹா.... உனது "அறிவு விளையாட்டை" விட எனது திருவிளையாடல் ஒன்றும் அவ்வளவும் அர்த்தங்கள் நிறைந்ததில்லை மானிடா..."

தொடரும்...

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!