தமிழகத்தில் கல்வி துறை செயல்படுகிறதா? சந்தேகம் கிளப்புகிறார் கருணாநிதி


avatar

தமிழகத்தில் கல்வி துறை செயல்படுகிறதா? சந்தேகம் கிளப்புகிறார் கருணாநிதி Tamil_News_large_512124
சென்னை :"மீண்டும் தேவையில்லாமல் மத்திய அரசு இந்தியைத் திணிக்க எத்தனிப்பது கடும் கண்டனத்துக்குரியது; நேருவின் வாக்குறுதியே நீர் மேல் குமிழியாவதா என்று தான் கேட்கத் தோன்றுகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்திலே உள்ள எல்.ஐ.சி., ஊழியர்கள் எல்லாம், வாரத்தில் ஒரு நாள் இந்தியில் கையெழுத்து கட்டாயமாக போட வேண்டுமென, மத்திய அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்தி பேசாத மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டு, மீண்டும் தேவையில்லாமல் இந்தியைத் திணிக்க எத்தனிப்பது கடும் கண்டனத்துக்குரியது. மத்திய அரசு இது பற்றி கவனித்து, தக்க நடவடிக்கை எடுக்குமா? என்பது இப்போது நம் முன் உள்ள கேள்வி. நேருவின் வாக்குறுதியே நீர் மேல் குமிழியாவதா? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

பெருங்கொடுமை:தமிழகத்தில் 64 ஆயிரத்து 138 மன வளர்ச்சி குன்றியோரும், 11 ஆயிரத்து 269 கடும் ஊனமுற்றோரும், 1,000 தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோரும் உள்ளனர். இவர்களுக்கான உதவித் தொகையைக் கொடுப்பதில் கூட தவறுகள் நடைபெற்றால், அது பெருங்கொடுமை தான். மாநிலம் முழுவதும் உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட பணி நிரவல் கலந்தாய்வில், மாவட்டத்திற்கு தலா 20 சதவீதம் காலி இடங்கள் மறைக்கப்பட்டதாக, ஆசிரியர்கள் அறிக்கை விட்டுள்ளனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற 1,150 பேருக்கு, இதுவரை உத்தரவுகள் வழங்கப்படவில்லை; அவர்களுக்கான பணி இடங்களும் குறிப்பிடப்படவில்லை.ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் காலி இடங்கள் குறித்து, எவ்வித விவரமும் வெளியிடவில்லை. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் கல்வித்துறை என்ற ஒரு துறை செயல்படுகிறதா? என்றே தெரியவில்லை.

துவங்கவில்லை:பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், மாணவர்களுக்கு பயண அட்டைகள் இன்னமும் வழங்கப்படவில்லை. பெரும்பாலான பள்ளிகளில், கையடக்கப் பஸ் பயண அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணியை இன்னும் துவங்கவில்லை. மாணவர்கள் அன்றாடம் 20 ரூபாய் கட்டணம் செலுத்தி தான் பள்ளிக்கு வர வேண்டியுள்ளதாம்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!